×

இந்தியாவின் பாரம்பரிய மருத்துவ முறைகளை இன்று உலக நாடுகள் பின்பற்ற தொடங்கி இருப்பது குறித்து நாம் அனைவரும் மகிழ்ச்சி அடைய வேண்டும் : பிரதமர் மோடி

டெல்லி :பாரம்பரிய மருத்துவதற்கான சர்வதேச மையத்தை இந்தியாவில் அமைக்க உலக சுகாதார நிறுவனம் முன்வந்துள்ளது நாட்டு மக்கள் அனைவருக்கும் கிடைத்துள்ள பெருமை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.  எதிர்காலத் தேவைக்கு 2 ஆயுர்வேத மையங்களை, 5வது ஆயுர்வேத தினமான இன்று , பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இவை குஜராத் மாநிலம் ஜாம்நகரில் உள்ள ஆயுர்வேத கல்வி மற்றும் ஆராய்ச்சி மையம்(ஐடிஆர்ஏ), ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள தேசிய ஆயுர்வேத மையம்(என்ஐஏ) ஆகியவையாகும்.  இரண்டும், நாட்டின் முன்னணி ஆயுர்வேத மையங்கள். ஐடிஆர்ஏ-வுக்கு நாடாளுமன்ற சட்டம் மூலம் தேசிய முக்கியத்துவ அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது. என்ஐஏ-வுக்கு, நிகர்நிலை பல்கலைக்கழக அந்தஸ்தை பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) வழங்கியுள்ளது.

பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவின் பாரம்பரியமாக ஆயுர்வேதம் உள்ளதாகவும் மனித குலத்தின் நல்வாழ்வில் கவனம் செலுத்துவதாக இந்த மருத்துவ முறை உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தியாவில் பாரம்பரியமாக மேற்கொள்ளப்படும் மருத்துவ முறைகளை இன்று உலக நாடுகள் பின்பற்ற தொடங்கி இருப்பது குறித்து நாம் அனைவரும் மகிழ்ச்சி அடைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். புத்தகங்களிலும் மருத்துவர்களின் நினைவுகளிலும் இருக்கும் ஆயுர்வேத மருத்துவ முறையை நவீன காலத்திற்கு ஏற்ப மேம்படுத்துவது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். பாரம்பரிய மருத்துவ அறிவியலையும் நவீன கால மருத்துவ அறிவியலையும் இணைப்பதற்கான புதிய ஆய்வுகள் இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வருவதையும் பிரதமர் தனது உரையில் சுட்டிக் காட்டினார். 


Tags : Modi ,nations ,world ,India , India, Medical System, Prime Minister Modi
× RELATED அரசமைப்பு சட்டத்தை மதிப்பதாக மோடி...