×

தாந்தோணி அருகே சிதிலமடைந்து கிடக்கும் உடுமலை கால்வாய்

உடுமலை : திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி உடுமலை கால்வாயில் 2-ம் மண்டலத்துக்கான 3-வது சுற்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.தாராபுரம் சாலை தாந்தோணி அருகே, கால்வாயின் பக்கவாட்டு சிலாப் கற்கள் பெயர்ந்து விழுந்து கிடக்கின்றன. இதனால் கரை பலவீனமாக இருப்பதோடு, கற்கள் உள்ளே விழுந்து கிடப்பதால் சீராக தண்ணீர் செல்ல முடியாமல் தடை ஏற்படுகிறது.

கால்வாய் பகுதியில் அடிக்கடி லஸ்கர் உள்ளிட்ட பொதுப்பணித்துறை அலுவலர்கள் ரோந்து செல்கின்றனர். இருப்பினும் கற்கள் விழுந்து கிடப்பதை கண்டுகொள்ளாமல் உள்ளனர். உடைந்த பக்கவாட்டு பகுதியை உடனடியாக சீரமைக்க வேண்டும். கால்வாய்க்குள் விழுந்துள்ள கற்களை அகற்ற வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Udumalai ,canal ,Thanthoni , Udumalai: The 3rd round of water for the 2nd zone has been opened in the BAP Udumalai canal from the Thirumurthy dam.
× RELATED பொள்ளாச்சி, உடுமலை வழியாக கோவை-சென்னை...