×

உறைபனியின் தாக்கம் அதிகரிப்பு அலங்கார செடிகளை பாதுகாக்க மிலார் செடிகளால் மூடும் பணி தீவிரம்

ஊட்டி: ஊட்டியில் பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுதால்,ரோஜா பூங்காவில் உள்ள அலங்கார செடிகளை பாதுகாக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.ஆண்டு தோறும் அக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் நீர் பனிப்பொழிவு துவங்கும். தொடர்ந்து நவம்பர் மாதம் முதல் படிப்படியாக உறைபனி விழத்துவங்கும். டிசம்பர் மாதம் முதல் கடும் உறைபனி காணப்படும். இந்த உறைபனியின் தாக்கம் தோடர்ந்து மூன்று மாதங்கள் நீடிக்கும்.

மார்ச் மாதம் முதல் வாரம் வரை பனியின் தாக்கம் காணப்படும். ஆனால், இம்முறை அக்டோபர் மாதம் துவக்கம் முதலே நீர் பனியின் தாக்கம் காணப்பட்டது. கடந்த வாரம் சில நாட்கள் மழை பெய்த நிலையில், பனியின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது. ஆனால், கடந்த மூன்று நாட்களுக்கு மேலாக உறைப்பனியின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. மலர் செடிகள், தேயிலை செடிகள் மற்றும் மலை காய்கறி செடிகள் பாதிக்க வாய்ப்புள்ளது.

குறிப்பாக, ஊட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பனியின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே, விவசாயிகள் மற்றும் தோட்டக்கலைத்துறையினர் தற்போது முன் எச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ரோஜா பூங்காவில், அலங்கார செடிகளை பனி தாக்காமல் இருக்க, செடிகளின் மீது கோத்தகிரி மிலார் செடிகளை கொண்டு மூடும் பணி நடந்து வருகிறது.
இதனால், இந்த அலங்கார செடிகளை உறைபனியில் இருந்து காக்க முடியும் என பூங்கா ஊழியர்கள் தெரிவித்தனர்.

Tags : mylar plants ,plants , Ooty: Due to the high impact of snow in Ooty, ornamental plants in the Raja Park
× RELATED பீட்ரூட் கீரை மசியல்