கங்கைகொண்டானில் ஆய்வு மதுரை - நெல்லை இரட்டை ரயில்பாதை பணிகள் வரும் மார்ச்சில் முடிவடையும்-பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் பேட்டி

நெல்லை : சென்னையில் இரு ந்து கன்னியாகுமரி வரை உள்ள ரயில் பாதை தமிழகத்தின் முக்கிய ரயில் வழித்தடமாகும். இந்த வழித்தடம் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், பெரம்பலூர், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் வழியாக குமரி மாவட்டத்தை சென்றடைகிறது.

தென்னக  ரயில்வேயில்  கன்னியாகுமரி முதல் சென்னை வரை இயக்கப்படும் ரயில்கள்  மூலம்  அதிக வருவாய் கிடைத்து வருகிறது. இந்த வழித்தடத்தில் அதிக ரயில்களை இயக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.  மதுரை முதல் குமரி வரை ஒரு வழிப்பாதையாக இருப்பதால் அதிக ரயில்களை இயக்க முடியாத நிலை இருந்து வருகிறது. இதையடுத்து ஆயிரத்து 182 கோடி ரூபாய் செலவில் இந்த பாதையை இருவழிப்பாதையாக மாற்ற   நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன.

மதுரையில் இருந்து கன்னியாகுமரி வரையிலான வழித்தடத்தில், கடம்பூர் முதல் கங்கைகொண்டான் வரையிலான 28 கிமீ தூரத்திற்கு இரட்டை ரயில்பாதை பணிகள் முடிவடைந்து விட்டது. இந்த பாதையில் 120 கிலோ மீட்டர்  வேகத்தில் ரயிலை இயக்கி  ரயில்வே  தென்மண்டல பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய், நேற்று ஆய்வு நடத்தினார்.  கங்கைகொண்டான் புதிய சரக்கு முனையம், புதிய ரயில் நிலையத்தில் செய்யப்பட்டுள்ள பயணிகளுக்கான வசதிகள், பிளாட்பாரம், இருக்கைகள், பிட்லைன் உள்ளிட்ட வசதிகளை ஆய்வு செய்தார்.

முன்னதாக அவர் நெல்லையில் அளித்த பேட்டி: மதுரையில் இருந்து நெல்லை  வரையிலான 155 கிலோ மீட்டர் தொலைவிற்கு இரட்டை ரயில் பாதை பணிகள் நடந்து  வருகிறது. இதில் கடம்பூர் முதல் கங்கைகொண்டான் வரை ரயில்பாதை பணிகள்  முடிக்கப்பட்டுள்ளது. இந்த வழித்தடத்தில் 120 கிலோ மீட்டர் வேகத்தில் ரயிலை  இயக்கி ஆய்வு செய்யப்பட்டது.

மதுரை முதல் நெல்லை வரையிலான  இரட்டை ரயில்பாதை பணிகள் 2021 மார்ச்சில் நிறைவு பெறும். இதுபோல்  கன்னியாகுமரி வரையிலான முழு திட்டப்பணிகள் 2021 டிசம்பரில் நிறைவுபெறும். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது  ரயில்வே மண்டல மேலாளர் லெனின், இரட்டை ரயில்பாதை  திட்ட  மேலாளர் கமலாக்கர் ரெட்டி, நிலைய மேலாளர் முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

100 கி.மீட்டராக வேகம் அதிகரிப்பு

இந்த புதிய ரயில் பா தையில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் ரயில்களை இயக்க அனுமதி அளிக்கப்பட்டது. தென்மண்டல முதன்மை பாதுகாப்பு ஆணையர் அபய் குமார் ராய் நேற்று ஆய்வுக்கு பின்னர் இந்த ரயில் பாதையில் ரயில்களின் வேகத்தை 100 கிலோ மீட்டராக அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆய்வின் போது மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் வி.ஆர். லெனின், ரயில் விகாஸ் நிகம் லிமிடெட் முதன்மை திட்ட மேலாளர் கமலாகர் ரெட்டி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories:

>