வகை, வகையான பால் ஸ்வீட்ஸ் அணிவகுப்பு பட்டையைக் கிளப்புது பால்கோவா விற்பனை-திருவில்லிபுத்தூரில் களைகட்டும் தீபாவளி கொண்டாட்டம்

திருவில்லிபுத்தூர் :  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவில்லிபுத்தூர் நகரில் பால்கோவா, பால் ஸ்வீட் விற்பனை அதிகரித்துள்ளதால் இவற்றிற்கு கடுமையான டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.தீபாவளியென்றாலே பட்டாசு, புத்தாடை, இனிப்பு என இல்லங்கள் களைகட்டும். நாளை தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட உள்ளது. விருதுநகர் மாவட்டம்,  திருவில்லிபுத்தூர்நகரம் பால்கோவாவுக்கு புகழ்பெற்றது.

இங்கு தற்போது பால்கோவா விற்பனை சக்கைப்போடு போடுகிறது. மேலும் பால் ஸ்வீட்களுக்கும் டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவில்லிபுத்தூரில் பால்கோவா மற்றும் ஸ்வீட் தயாரித்து விற்பனை செய்யும் பாம்பே ரவி கூறுகையில்,  ‘‘திருவில்லிபுத்தூர் நகரில் ஐயப்பன் கோயில் சீசன், ஆண்டாள் கோயில் தேரோட்டம் மற்றும் தீபாவளி நேரங்களில் தான் பால்கோவா மற்றும் பால் ஸ்வீட் விற்பனை அதிகரிக்கும்.

நாளை தீபாவளி கொண்டாடப்பட உள்ள நிலையில் பால்கோவா மற்றும் பால் ஸ்வீட் விற்பனை உச்சக்கட்டத்தில் உள்ளது. திருவில்லிபுத்தூர் மட்டுமன்றி பல்வேறு ஊர்களில்உள்ளவர்களும் இங்கு வந்து பால்கோவா மற்றும் பால் ஸ்வீட்டுகளை ஆர்வமாக வாங்கிச் செல்கின்றனர்’’ என்கிறார்.

Related Stories:

>