×

பகவான் தன்வந்திரி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியையும், வளத்தையும் கொண்டு வரட்டும் : தந்தேராஸ் திருநாளை முன்னிட்டு பிரதமர் மோடி வாழ்த்து

டெல்லி : தந்தேராஸ் திருநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக தந்தேராஸ் பண்டிகை பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் தனத்ரயோதாஷி என்றும் அழைக்கப்படும். தந்தேராஸ் என்கிற வார்த்தை இரண்டு சமஸ்கிருத வார்த்தைகளிலிருந்து உருவாக்கப்பட்டது. தன் என்றால் செல்வம் என்று பொருள். இந்து நாட்காட்டியின் படி தேராஸ் என்பதற்கு 13 வது நாள் என்று பொருள். அதன்படி, இந்தாண்டு நவம்பர் 13ம் தேதி வெள்ளிக்கிழமை(இன்று)பண்டிகை கொண்டப்படவுள்ளது.

தந்தேராஸில், மக்கள் தங்கள் வீடுகளுக்கு வெளியே இரவில் எம தீபத்தை ஒளிரச் செய்வார்கள். புராணங்களின்படி, த்ரயோதாஷி திதியில் அவ்வாறு செய்வது மரணத்தின் கடவுளான யமராஜை விரட்ட முடியும் என்பது ஐதீகம். மேலும் தந்தேராஸ் தினத்தன்று, சமுத்திரமந்தனின் போது லட்சுமி தேவி செல்வத்தின் கடவுளான குபேரா பகவானுடன் தோன்றியதாகவும் கூறப்படுகிறது. அதனால் நாளின் மாலை வேளையில் லட்சுமி பூஜை செய்யப்படுகிறது. அந்த தினத்தில் புதிய பாத்திரங்கள் மற்றும் நகைகள் அல்லது தங்க நாணயங்கள் மற்றும் வெள்ளி பொருட்களை வாங்குவது உங்கள் குடும்பத்திற்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரும் என்று நம்பப்படுகிறது. தந்தேராஸ் தினத்தை கொண்டாடுபவர்கள் வழக்கமாக சந்தைகளுக்குச் சென்று தங்க பிஸ்கட் அல்லது தங்கத்தால் செய்யப்பட்ட ஆபரணங்களை வாங்குவர்.

இந்த நிலையில் தந்தேராஸ் திருநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள டிவிட்டர் பதிவில், `பகவான் தன்வந்திரி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியையும், வளத்தையும், நல்வாய்ப்புகளையும், சிறந்த ஆரோக்கியத்தையும் கொண்டு வரட்டும்’ என்று கூறியுள்ளார்.


Tags : Dhanwantari ,Modi ,occasion , Bhagavan, Dhanwantari, Thanderas, Thirunal, Prime Minister Modi, Greetings
× RELATED வெறுப்பு பிரசாரம் பிரதமர் மோடி மீது...