×

பாகிஸ்தான் வெளியிட்ட தீவிரவாதிகள் பட்டியலில் மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் பெயர்கள் இல்லை : இந்தியா கடும் கண்டனம்

டெல்லி : மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களின் பெயர்களை பாகிஸ்தான் மூடி மறைத்து விட்டதாக இந்தியா குற்றம் சாட்டியுள்ளது. பாகிஸ்தானில் தேடப்படும் தீவிரவாதிகள் பட்டியலை அந்நாட்டின் மத்திய உயர்மட்ட விசாரணை ஹபீஸ் சையத், ஜெய்ஷ்-இ- முகமது தீவிரவாத அமைப்பின் தலைவர் மசூத் அசார் ஆகியோரின் பெயர்கள் இடம் பெறவில்லை. இது குறித்து கடும் கண்டனம் தெரிவித்துள்ள வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா, மும்பை தாக்குதல்களுக்கு மூளையாக செயல்பட்டவர்கள் சதி திட்டத்தை தீட்டியவர்களின் பெயர் விடுப்பட்டுள்ளதாக தெரிவித்தார். பாகிஸ்தான் அதனை வேண்டும் என்றே தவிர்த்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

மும்பையில் கடந்த 2008ம் ஆண்டு பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 150க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். 300க்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட 10 தீவிரவாதிகளில் 9 பேர் கொல்லப்பட்டு விட்டனர். இந்த நிலையில் பாகிஸ்தானில் தேடப்படும் தீவிரவாதிகள் பட்டியலை அந்நாட்டின் விசாரணை அமைப்பான எப்ஐஏ வெளியிட்டது. அதில் மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களின் பெயர்களை பாகிஸ்தான் தவிர்த்துவிட்டது என்பதே இந்தியாவின் குற்றச் சாட்டாக உள்ளது.    


Tags : attacks ,terrorists ,Mumbai ,India ,Pakistan , Pakistan, Terrorists, List, Mumbai Attack, Brain
× RELATED 133 பேர் பலியான மாஸ்கோ தாக்குதல்...