செங்கம் அருகே சாலை விபத்தில் 2குழந்தைகள் உள்பட 3பேர் பலி

செங்கம் : செங்கம் அருகே கண்டெய்னர் லாரி- கார் நேருக்கு நேர் மோதி கொண்ட விபத்தில் 2 குழந்தைகள் உளப்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊருக்கு சென்ற பொது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 2 வயது குழந்தை தேவதர்ஷினி, குமார் நிஷாந்த் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் படுகாயமடைந்த 2 பெண்கள் திருவண்ணாமலை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>