×

கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு 10% போனஸ்

சென்னை: கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என்று தமிழக அரசு கூடுதல் தலைமை செயலாளர் தயானந்த் கட்டாரியா அறிவித்துள்ளார். அவரது அறிக்கை: தமிழக அரசு கூட்டுறவு சங்கங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு இந்த ஆண்டு தீபாவளி பண்டிகையொட்டி 10 சதவீதம் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத்தொகை என 10 சதவீதம் போனஸ் வழங்கப்படும். மேலும் இது தவிர எந்த விதமான நிதி சலுகைகளை கூட்டுறவு சங்கங்கள் சார்பில் தமிழக அரசிடம் கேட்க கூடாது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Tags : 10% bonus for co-operative employees
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...