×

சாலைகளில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு: நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

புழல்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான புழல், செங்குன்றம், சோழவரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்தது.  இதனால் தாழ்வான பகுதிகளில்  மழைநீர் தேங்கி ஆங்காங்கே குளம் போல் காட்சியளிக்கிறது.  குறிப்பாக, சென்னை மாதவரம் முதல் புழல் காவாங்கரை சாமியார் மடம்,  செங்குன்றம் பாடியநல்லூர்,  சோழவரம், காரனோடை வரை உள்ள  சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின்  இரண்டு பக்கங்களிலும் பெருமளவில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதன் காரணமாக, வேலைக்கு செல்வோர், வாகனயோட்டிகள் மற்றும் பாதசாரிகள் எனப் பல தரப்பினரும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாயினர். எனவே, சம்பந்தப்பட்ட  துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து சாலைகளில் தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  


Tags : roads , Traffic damage due to rainwater accumulation on roads: Public demand for action
× RELATED தமிழ்நாட்டில் உள்ள 5...