பழவேற்காடு அரசு பள்ளிக்கு முன்னாள் மாணவர்கள் உபகரணங்கள் வழங்கும் விழா

பொன்னேரி:  பழவேற்காட்டில் ஜெகதாம்பாள் சுப்பிரமணியம் அரசினர் மேல்நிலைப்பள்ளி உள்ளது.  இப் பள்ளியில் பயின்ற பழைய மாணவர்கள் அவ்வப்போது சில உதவிகளை செய்து வருவது வழக்கம். 1999-2000 ஆண்டு  பயின்ற மாணவர்கள் ஒன்று சேர்ந்து 20 ஆண்டுகள் நினைவை கொண்டாடும் வகையில் தற்போது பள்ளியில் சங்கமித்தனர். பழைய மாணவர்கள் சங்கம நிகழ்ச்சியில் பள்ளிக்கு சிசிடிவி கேமரா உள்ளிட்ட பொருட்கள் வழங்கினர்.

இந்த நிகழ்ச்சிக்கு திருப்பாலைவனம் உதவி காவல் ஆய்வாளர் இரா.மணி கலந்துகொண்டு சிசிடிவி கேமராவை திறந்து வைத்தார்.பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பி.டி.மோகன ஜோதி பள்ளி தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்கள் பழைய மாணவர்களுக்கு வாழ்த்து கூறினர்

Related Stories: