×

தீபாவளிக்கு டாஸ்மாக் கடைகளில் அதிக மதுபானங்கள் இருப்பு வைப்பு: அதிகாரிகள் ஏற்பாடு

திருவள்ளூர்: தீபாவளியை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும், அதிகளவு மதுபானங்கள் இருப்பு வைக்கும் பணிகளில் டாஸ்மாக் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். தீபாவளி தினத்தன்று தட்டுப்பாடின்றி குடிமகன்களுக்கு சரக்கு விற்பனை செய்யும் வகையில், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளில் 15 நாட்களுக்கு தேவையான சரக்குகளை இருப்பு வைத்துக் கொள்ளும்படி வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் விழாக் காலங்களில் நடைபெறும் சரக்கு விற்பனையை கருத்தில் கொண்டு, 60 சதவீதம் கூடுதல் சரக்குகள் குடோன்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

தற்போது டாஸ்மாக் கடைகளுக்கு சரக்கு சப்ளை செய்யும் பணிகள் துவங்கியுள்ளது. மொத்தம் 15 நாட்களுக்கு தேவையான சரக்குகள் கடைகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு கடைக்கும் குறைந்தது, ரூ.20 லட்சம் முதல் அதிகபட்சமாக ரூ.50 லட்சம் மதிப்புள்ள சரக்குகள் இருப்பு இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என, கடை சூபர்வைசர்கள், ஏரியா சூபர்வைசர்களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, டாஸ்மாக்  அலுவலர் ஒருவர் கூறுகையில், ‘ மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் சரக்குகள் தட்டுப்பாடின்றி, விரும்பிய சரக்குகள் கிடைக்கும் வகையில், குடோன்களில் இருந்து சரக்குகள் அனுப்பப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் தாண்டி விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், புத்தாண்டு- 2021 பிறப்பின்போதும் மது விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது’’என்றார்.  



Tags : stores ,Tasmag ,Diwali , More liquor stocks in Tasmag stores for Diwali: Officials arrange
× RELATED 3 நாட்கள் விடுமுறை எதிரொலி; டாஸ்மாக்...