×

சுடுகாட்டில் கிடந்த பச்சிளம் குழந்தை மீட்பு: வீசியது யார்? தீவிர விசாரணை

மதுராந்தகம்: மதுராந்தகம் சுடுகாட்டில் பிறந்து சில நாட்களே ஆன பளச்சிளம் பெண் குழந்தையை போலீசார் மீட்டனர். அதனை வீசி சென்றது யார் என தீவிரமாக விசாரிக்கின்றனர். மதுராந்தகம் செங்குந்தர்பேட்டை சுடுகாடு பகுதியில் நேற்று முன்தினம் மாலை, குழந்தையின் அழுகுரல் கேட்டது. இதனால், திடுக்கிட்ட அப்பகுதி மக்கள், அங்கு சென்று பார்த்தனர். அப்போது,  பிறந்து சில நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தை கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அந்த குழந்தையை பாதுகாப்பான நிலையில் படுக்க வைக்கப்பட்டு இருந்தது. தகவலறிந்து மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, குழந்தையை மீட்டு மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மிகவும் சோர்வுடன் காணப்பட்ட குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள், நல்ல நிலையில் இருப்பதாக தெரிவித்தனர். அந்த குழந்தையை அரசு காப்பகத்தில் ஒப்படைக்க உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த குழந்தையை வீசி சென்றது யார், தவறான முறையில் பிறந்ததா, பெண் குழந்தை என்பதால் வீசி ெசன்றார்களா, குழந்தை கடத்தி வரப்பட்டதா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால் மதுராந்தகம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : investigation , Infant rescue: Who threw it? Serious investigation
× RELATED தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம்...