ஆர்கே நகர் தொகுதியில் கிடப்பில் உள்ள ரயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க வேண்டும்: பொது மேலாளரிடம் திமுக எம்பி கடிதம்

சென்னை: வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி நேற்று தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஜான் தாமஸை சந்தித்து கடிதம் ஒன்றை அளித்தார். அதில் கூறியிருப்பதாவது:  ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கொருக்குப்பேட்டை, எண்ணூர் நெடுஞ்சாலை, மணலி சாலை ஜங்சன் தண்டவாள பகுதியில் ரூ.117 கோடியில் மேம்பாலம் அமைக்க 2015ல் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை பணிகள் துவங்கப்படாததால், மீண்டும் ரூ.157 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்து, கடந்த ஆண்டு மண் பரிசோதனை செய்தனர்.அதன்பிறகு எந்த பணியும் நடைபெறவில்லை. அதனால் வாகன ஓட்டிகள் தண்டவாளத்தை கடப்பதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிருக்கிறது. எனவே போர்க்கால அடிப்படையில் இந்த மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>