×

சிட்டிஸ் திட்டத்தில், 95.25 கோடி செலவில் உலக தரத்தில் மேம்படுத்தப்படும் சென்னை மாநகராட்சி பள்ளிகள்: விளையாட்டுகளை ஊக்குவிக்க ஏற்பாடு

சென்னை: சிட்டிஸ் திட்டத்தின் கீழ், 95.25 கோடி செலவில் மாநகராட்சி பள்ளிகளை மேம்படுத்தும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது.
பிரான்ஸ் மேம்பாட்டு முகமை நிதி உதவியுடன் சிட்டிஸ் திட்டத்தின்கீழ் சென்னை மாநகராட்சி பள்ளிகளை உலக தரத்திற்கு ஏற்றவகையில் மாற்றியமைக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு 95.25 கோடி. இதில் 76.2 கோடியை பிரான்ஸ் மேம்பாட்டு முகமை அளிக்கும். மீதமுள்ள தொகையை மத்திய, மாநில அரசுகள் இணைந்து வழங்கும். இதன்படி பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவது, மாணவர்களின் கற்றல் திறனை ேமம்படுத்துவது, ஆசிரியர்களுக்கு கற்பிக்கும் திறனை ேமம்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் செய்யப்பட உள்ளது.

இந்த திட்டத்தின்படி சென்னையில் 46 மாநகராட்சி பள்ளிகள் சீரமைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக கொரட்டூர் மற்றும் சிமிட்ரி சாலை ஆகிய 2 பள்ளிகளை சீரமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது. இது தொடர்பாக ஸ்மாட் சிட்டி நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
இந்த திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதி மேம்படுத்தப்படும். டிஜிட்டல் முறையில் கல்வி கற்க ஏற்பாடு மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படும். குறிப்பாக மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

மாணவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து அனைத்து போட்டிகளிலும் பங்கேற்கும் வகையில் அணிகள் உருவாக்கப்படும். முதற்கட்டமாக நெசப்பாக்கம் மற்றும் சிமிட்ரி சாலை உள்ளிட்ட 2 பள்ளிகள் மேம்படுத்தப்பட உள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.



Tags : Chennai Corporation Schools , Chennai Corporation schools to be upgraded to world class at a cost of Rs 95.25 crore under the Citis project: Arrangements to promote sports
× RELATED சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை ஒரு லட்சத்தை தாண்டியது