×

பயங்கர ஆயுதங்களுடன் உல்பா தலைவன் போலீசில் சரண்

ஷில்லாங்: உல்பா தீவிரவாத இயக்கத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவரான  ராஜ்கோவா, தனது கூட்டாளிகளுடன் சரணடைந்தான்.
இது குறித்து மேகாலயா டிஜிபி சந்திராந்தன் கூறியதாவது: பல பயங்கரவாத அமைப்புகளின் புகலிடமாக கரோ மலைப்பகுதி உள்ளது. இதனால், தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு சிறப்பு படைகளையும், தாக்குதல் நடவடிக்கைகளையும் இப்பகுதியில் மேகாலயா அரசு அதிகரித்தது. இதனால், பல தீவிரவாத அமைப்புகள் செயல்பட முடியாமல் முடங்கி உள்ளன. பல தீவிரவாதிகள் சரணடைந்து வருகின்றனர். இதன் ஒரு முக்கிய கட்டமாக, தடை செய்யப்பட்டுள்ள உல்பா அமைப்பின் தலைவர்களில் ஒருவனான ராஜ்கோவா நேற்று தனது 4 கூட்டாளிகளுடன் ராணுவத்திடம் சரணடைந்தான்.

அசாம் மாநிலம், கோல்பாரா மாவட்டத்தில் பிறந்த 50 வயதான திரிஷ்டி ராஜ்கோவா, கரோ வனப்பகுதியில் பல தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தவன். இவன் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள், ஆயுதக்கடத்தல் வழக்குகள் உள்ளன. தன்னால் இனி செயல்பட முடியாது என்ற நெருக்கடியைப் புரிந்து கொண்டதால் தற்போது சரணடைந்துள்ளான். அவன் நவீன 81 துப்பாக்கிகள், 2 கைத்துப்பாக்கி, 107 கிலோ வெடிமருந்துகள் போன்றவற்றை ஒப்படைத்தான். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : ULFA , ULFA leader surrenders to police with deadly weapons
× RELATED ஒன்றிய அரசுடன் உல்பா அமைதி ஒப்பந்தம்