×

ஊரடங்கிற்கு முன்பு இருந்ததை விட மருத்துவ காப்பீடு பிரீமியம் 200% வரை உயர்வு: பாலிசிதாரர்கள் கடும் அதிர்ச்சி

புதுடெல்லி: மருத்துவ காப்பீடு மிகவும் அவசியமாகி விட்டது. குறைந்தது 3 லட்சம் முதல் 5 லட்சம் வரை காப்பீடு எடுத்தால் கவலையில்லை. பலர் குடும்பத்துக்கும் சேர்த்து காப்பீடு எடுத்து வருகின்றனர்.  கொரோனா பரவலுக்கு பிறகு மருத்துவ காப்பீடுகளின் தேவையும் அதிகமாகி விட்டது. இந்நிலையில், பெரும்பாலான பாலிசிக்களுக்கான பிரீமியம் கொரோனா பரவலுக்கு முன்பு இருந்ததை விட அதிகரித்துள்ளது. மூத்த குடிமகன்களுக்கான மருத்துவக் காப்பீடு பிரீமியம் 200 சதவீதத்துக்கு மேல் உயர்ந்துள்ளது. உதாரணமாக, மூத்த குடிமகன் ஒருவரின் மருத்துவக் காப்பீடு கடந்த மாதம் புதுப்பிக்க வேண்டியிருந்தது. இதற்கு முன்பு 15,600 பிரீமியம் செலுத்தியுள்ளார். இது தற்போது 221 சதவீதம் உயர்ந்து 50,076 ஆகியுள்ளது.

 சுமார் 60 சதவீத மருத்துவ காப்பீடு பாலிசிதாரர்கள், தங்கள் பிரீமியம் 1 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை உயர்ந்ததாகவும், 13 சதவீதம பேர் 15 முதல் 50 சதவீதம் காப்பீடு பிரீமியம் உயர்ந்துள்ளதாகவும், 5 சதவீதம் பேர் 50 முதல் 100 சதவீதம் அல்லது அதற்கு மேல் பிரீமியம் தொகை உயர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளனர் என பல்வேறு நிறுவனங்களின் காப்பீடு தொடர்பாக ஒப்பீடு செய்து பார்க்க உதவும் இணையதளம் மூலம் தெரிய வந்துள்ளது. காப்பீடு கட்டுப்பாட்டு ஆணையம் காப்பீடு தொடர்பாக புதிய விதிமுறைகள் அறிவித்துள்ளது. சில காப்பீடுகளில் நோய்கள் வகைப்பாடு விடுபட்டுள்ளதால், பாலிசிதாரர்கள் வேறு காப்பீட்டை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதுவும் பிரீமியம் உயர முக்கிய காரணம் எனவும் கூறப்படுகிறது.

Tags : policyholders , 200% increase in premium medical insurance premium: Policyholders shocked
× RELATED பாலிசிதாரர்கள் தங்கள் மாதாந்திர...