இலங்கையில் கரை ஒதுங்கிய வேதை மீனவர்களுக்கு டீசல் வழங்கி அனுப்பி வைத்த இலங்கை கடற்படை

வேதாரண்யம்: நாகை மாவட்டம் கோடியக்கரையில் இருந்து ஒரு படகில் கடந்த 7ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற தரங்கம்பாடி பகுதியை சேர்ந்த முத்துலிங்கம், ரஞ்சித், அண்ணாதுரை, ராஜ் ஆகிய 4 மீனவர்கள் படகில் டீசல் தீர்ந்ததால் காற்றின் போக்கில் இலங்கை யாழ்ப்பாணம் மாவட்டம் வடமராச்சி மாகாணம் வெற்றிலை கேணி அருகே உள்ள மாமுனை என்ற இடத்தில் கரை ஒதுங்கினர். அங்கு நான்கு மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் பாதுகாப்பாக தங்க வைத்து உணவு வழங்கினர். 3 நாட்கள் அங்கு தங்கி இருந்த மீனவர்களின் படகிற்கு 50 லிட்டம் டீசல் வழங்கி கோடியக்கரைக்கு அனுப்பி வைத்தனர்.

இலங்கையில் இருந்து புறப்பட்ட இந்த 4 மீனவர்களும் இன்று காலை கோடியக்கரை வந்து சேர்ந்தனர். பத்திரமாக வந்த மீனவர்களை உறவினர்கள் கட்டி தழுவி வரவேற்றனர். வழக்கமாக எல்லை தாண்டி செல்லும் மீனவர்களை தாக்குவதும், அடிப்பதும், துன்புறுத்துவதும் இலங்கை கடற்படையின் செயலாகும். ஆனால் இந்த நான்கு மீனவர்களையும் பாதுகாப்பாக முகாமில் தங்க வைத்து உணவு வழங்கி சொந்த ஊருக்கு அனுப்பி வைத்து உள்ளது இப்பகுதி மீனவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் 4 பேரும் தாங்கள் கொண்டு வந்திருந்த மீனை, ரூ.12,000க்கு ஏலம் விட்டனர்.

Related Stories:

>