தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பை தமிழக அரசு ஒத்திவைத்திருப்பது மிகச்சரியான முடிவு : அன்புமணி ராமதாஸ் வரவேற்பு!!

சென்னை : பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ட்விட்டர் பதிவு வருமாறு: தமிழ்நாட்டில் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பை தமிழக அரசு ஒத்திவைத்திருப்பது மிகச்சரியான முடிவு. இம்முடிவை நான் வரவேற்கிறேன். பண்டிகை காலங்களில் கொரோனா பரவல் வாய்ப்பு அதிகமாக இருப்பதால் இந்த விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கை தேவை! கொரோனா வைரஸ் நோய் மிகவும் ஆபத்தானது. மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடியது. எனவே, இனிவரும் நாட்களிலும் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு குறித்த  முடிவு மருத்துவ வல்லுனர்கள் அளிக்கும் பரிந்துரைகளின் அடிப்படையில் தான் மேற்கொள்ளப்பட வேண்டும்! ஓணம் திருநாளின் போது கட்டுப்பாடுகள் கடைபிடிக்கப்படாதது தான் கேரளத்தில் கொரோனா  அதிகரிக்கக் காரணம். தமிழகத்தில் அத்தகைய நிலை ஏற்படாமல் தடுக்க  தீபஒளி காலத்தில் கூடுதல் கட்டுப்பாட்டுடனும் எச்சரிக்கையுடனும் மக்கள் செயல்பட வேண்டும்

Related Stories:

>