×

கொரோனாவுக்கான ஸ்புட்னிக்-வி தடுப்பு மருந்து 92 சதவீதம் வெற்றி : ரஷிய அரசு அறிவிப்பு

மாஸ்கோ, :கொரோனாவுக்கான ஸ்புட்னிக்-வி தடுப்பு மருந்து 92 சதவீதம் வெற்றி பெற்றுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது. இடைக்கால பரிசோதனைகளின் அடிப்படையில் ஸ்புட்னிக்-வி பயனுள்ளதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.தடுப்பு மருந்து சோதனையில் 40க்கும் மேற்பட்ட உலக நிறுவனங்கள் மூன்றாம் கட்ட சோதனை நிகழ்த்திவரும் நிலையில், ஜெர்மனியின் பயான்டெக் நிறுவனமும் அமெரிக்காவின் பைசர் நிறுவனமும் இணைந்து கண்டுபிடித்த தடுப்பு மருந்து 90 சதவீதம் பலன் அளிப்பதாக தெரிவித்துள்ளது. இந்நிலையில், ரஷ்யாவின் ‘ஸ்புட்னிக்-வி’ என்னும் கொரோனா தடுப்பூசியின் இடைக்கால சோதனை முடிவுகளின்படி, இந்த தடுப்பு மருந்து கொரோனாவிலிருந்து மக்களைப் பாதுகாப்பதில் 92 சதவீதம் பயனுள்ளதாக இருக்கும் என்று அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்த, தொற்றுநோய்க்கான காமாலேயா தேசிய ஆராய்ச்சி நிறுவனம், ‘ஸ்புட்னிக்-வி’ என்ற கொரோனா தடுப்பு மருந்தை, கண்டுபிடித்து உள்ளதாக ஆகஸ்ட் 11ல் வெளியிட்டது. இதை, அதிகாரப்பூர்வ தடுப்பு மருந்தாக ரஷ்ய சுகாதாரத்துறை அமைச்சகம் பதிவு செய்தது. இதையடுத்து, உலகின் முதல் கொரோனா தடுப்பு மருந்தாக, ஸ்புட்னிக்-வி கருதப்படுகிறது. தற்போது இந்த கொரோனா தடுப்பூசி இடைக்கால சோதனையின்படி, கொரோனாவிலிருந்து 92 சதவீதம் மக்களைப் பாதுகாப்பதில் பயனுள்ளதாக இருக்கும் என அந்நாட்டு சுகாதாரத்துறை அறிவித்து உள்ளது.



Tags : government ,Russian , Corona, Sputnik-V, Prevention, Medicine, Government of Russia, Notice
× RELATED நாட்டின் மொத்த விலை பணவீக்க விகிதம்...