தீபாவளியை ஒட்டி கடைகளில் அலைமோதும் மக்கள் கூட்டம்.: பண்டிகை மகிழ்ச்சியில் கொரோனா விதிகளை பின்பற்றவில்லை

சென்னை: தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளதால் புத்தாடை வாங்குவதில் பொதுமக்கள் தீவிரமாக காட்டுவதால் கடை விதிகளில் கூட்டம் அலைமோதுகிறது. தலைநகர் சென்னையில் பல்வேறு இடங்களில் காலை முதல் மழை வெளுத்துவங்கியது. வணிக பகுதியான தியாகராய நகரிலும் கனமழை கொட்டியது. கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் புத்தாடை வாங்க பொதுமக்கள் அலை அலையாக திரண்டு வந்தனர்.

திருச்சி மலைக்கோட்டையில் உள்ள முக்கிய வணிக பகுதியான என்.எஸ்.பி சாலையில் காலை முதல் மக்களின் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும் புத்தாடை, இனிப்பு, பட்டாசு வாங்க பொதுமக்கள் குடும்பத்துடன் வருகின்றனர். கூட்டம் அதிக அளவில் இருந்தாலும் கடந்த ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு விற்பனை குறைவாக இருப்பதாக வியாபாரிகள் கூறியுள்ளனர்.

இரவு 10 மணிக்கு மேல் கடைகளை திறக்க அனுமதி மறுக்கப்பட்டிருப்பது விற்பனை குறைவுக்கு காரணம் என்றும் வியாபாரிகள் கூறுகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கடை விதிகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படுகின்றனர். கொரோனாவுக்கு இடையிலும் பண்டிகை காலத்தில் கடைசிக்கட்ட பொருட்களை வாங்குவதில் மக்கள் மும்முரமாக இருப்பதால், தீபாவளி பண்டிகை கலைக்கட்ட தொடங்கியுள்ளது.

Related Stories:

>