×

பண பலம், அதிகார பலத்தை பயன்படுத்தி ஆர்.ஜே.டி. வெற்றி பெறுவதை தடுத்து விட்டனர் : ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் சாடல்

பாட்னா: அதிகாரத்தில் நிதிஷ்குமார் இருந்தாலும் மக்கள் இதயங்களில் நாங்கள் தான் இருக்கிறோம் என ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பாரதிய ஜனதா, ஐக்கிய ஜனதா தள கூட்டணி, பெரும்பான்மைக்கு தேவையான தொகுதிகளில் வெற்றி பெற்று, ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 125 தொகுதிகளில் இக்கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. ஆனால் தற்போதைய முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தள கட்சி, 43 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள நிலையில், கூட்டணி கட்சியான பாஜ, 74 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.இருப்பினும் ஏற்கனவே உறுதியளித்தபடி நிதிஷ்குமார்தான் பீகாரின் முதல்வர் என்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட பாஜ தலைவர்கள் அனைவரும் அறிவித்து விட்டனர். இதனால் நிதிஷ்குமார் முதல்வராக பதவியேற்பதில் தற்போதைக்கு எந்த சிக்கலும் இல்லை என்றே தெரிகிறது.

இந்த நிலையில் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் செய்தியாளர்களுக்கு இன்று பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது, பீகார் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடந்துள்ளது. பண பலம், அதிகார பலத்தை பயன்படுத்தி ஆர்.ஜே.டி. வெற்றி பெறுவதை தடுத்து விட்டனர்.பீகார் தேர்தலில் மெகா கூட்டணிக்கே மக்கள் ஆதரவு அளித்துள்ளனர்.அதிகாரத்தில் நிதிஷ்குமார் இருந்தாலும் மக்கள் இதயங்களில் நாங்கள் தான் இருக்கிறோம். 2015ம் ஆண்டு மகா கூட்டணி உருவான போது, மக்களின் ஆதரவு எங்களுக்கு இருந்தது. மக்களின் ஆதரவு எங்களுக்கு இருந்தாலும் அதிகாரத்தை பெறுவதற்காக பாஜக பின்வாசல் வழியாக ஆட்சிக்கு வந்தது. பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டது. பீகார் தேர்தலில் பதிவான வாக்குகளை மீண்டும் என்ன வேண்டும். மிகவும் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் 20 இடங்களை இழந்துள்ளோம். இறுதியாக எண்ணப்பட்ட அஞ்சல் வாக்குகளை மீண்டும் என்ன வேண்டும், என்றார்.


Tags : RJD ,Tejaswi Yadav Sadal , Cash strength, power strength, RJD. , Victory, Rashtriya Janata Dal leader, Tejaswi Yadav, Sadal
× RELATED லாலு கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு 1...