×

வடகிழக்கு, இமாலய மாநிலங்களுக்கு 41 வகையான காய்கறிகளையும், பழங்களையும் அனுப்பினால், விமான கட்டணத்தில் 50 % மானியம்

டெல்லி : தற்சார்பு இந்தியா தொகுப்பில் ஆபரேஷன் பசுமைத் திட்டத்தின் கீழ் வடகிழக்கு மற்றும் இமாலய மாநிலங்களுக்கு 41 வகையான காய்கறிகளையும், பழங்களையும் அனுப்பினால், விமான கட்டணத்தில் 50 % மானியம் அளிக்கப்படுகிறது.இந்தியாவின் எந்தப் பகுதியிலிருந்தும் வடகிழக்கு மற்றும் இமாலய மாநிலங்களுக்கு காய்கறிகளையும், பழங்களையும் அனுப்பலாம். மானியக் கட்டணத்தை விமான நிறுவனங்கள் நேரடியாக வழங்கும். பொருட்களை அனுப்புவோரிடம் விமான நிறுவனங்கள் 50% கட்டணத்தைப் பெற்றுக் கொண்டு, பாக்கி 50 % வீதக் கட்டணத்தை மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சகத்திடம் இருந்து மானியமாக பெற்றுவிடும். இந்தத் திட்டத்துக்கு கடந்த 2ம் தேதி ஒப்புதல் அளிக்கப்பட்டு, மாற்றியமைக்கப்பட்ட வழிகாட்டுதல்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அறிவிக்கப்பட்டுள்ள 41 வகை காய்கறிகளையும், பழங்களையும் அளவின்றி 50% மானியக் கட்டணத்தில் அனுப்பலாம்.  இந்தப் போக்குவரத்து மானியம், பசுமை ஆபரேஷன் திட்டத்தின் கீழ்  கிசான் ரயில் சேவைக்கு கடந்த அக்டோபர் மாதம் நீட்டிக்கப்பட்டது. இந்த ரயிலில் கொண்டு செல்லப்படும் காய்கறி மற்றும் பழங்களுக்கும் 50% கட்டணமே வசூலிக்கப்படுகிறது.

தகுதியான பழங்களும், காய்கறிகளும் :

பழங்கள் (21) - மாம்பழம், வாழைப்பழம், கொய்யா, கிவி, லிச்சி, சாத்துக்குடி, ஆரஞ்சு, கின்னோவ், எலுமிச்சை, பப்பாளி, பைன் ஆப்பிள், மாதுளை, பலாப்பழம், ஆப்பிள், பாதம், நெல்லிக்காய், பேஷன் பழம், பேரிக்காய், சர்க்கரை வள்ளிக்கிழங்கு, சப்போட்டா.

காய்கறிகள்(20): பிரெஞ்ச் பீன்ஸ், பாகற்காய், கத்திரிக்காய், கேப்சியம், கேரட், காலிபிளவர், பச்சை மிளகாய், வெண்டக்காய், வெள்ளரிக்காய், பட்டாணி, வெள்ளைப்பூண்டு, உருளைக் கிழங்கு, தக்காளி, பெரிய ஏலக்காய், பூசணிக்காய், இஞ்சி, முட்டைக்கோஸ், சுரைக்காய், மஞ்சள்.

தகுதியான விமான நிலையங்கள்:

அருணாச்சலப் பிரதேசம், அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகலாந்து, சிக்கிம்(பக்தோக்ரா), திரிபுரா, இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு காஷ்மீர், லடாக்கில் உள்ள அனைத்து விமான நிலையங்கள்.


Tags : Northeastern ,Himalayan ,states , Northeast, Himalayan States, types of vegetables, fruits, airfare, subsidy
× RELATED இரு வடகிழக்கு மாநிலங்களில் போட்டியில் இருந்து விலகிய பாஜக!!