மதுரையில் விளைநிலம் வழியே எரிவாயு குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு: நெல் வயல்களை சேதப்படுத்துவதாக வேதனை

மதுரை: மதுரையில் விளைநிலம் வழியே எரிவாயு குழாய் பதிக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட கம்பூர், அலங்கம்பட்டி மற்றும் அய்யாபட்டி, சுந்தரலிங்கபுரம், ஆகிய பகுதிகளில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் சார்பில் இயற்கை எரிவாயு குழாய் அமைப்பதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டம் கொட்டாம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயிகள் நெல் பயிரிட்டிருக்கிறார்கள். அந்த நாற்றானது வளர்ந்து தற்போது பச்சை பசேலென காட்சியளிக்கிறது.

இந்த நிலையில் வயலுக்குள் கனரக இயந்திரங்கள் மூலம் விவசாய நிலங்களை அளித்து பைப் லைன் அமைக்கும் பணியை அதிகாரிகள் மேற்கொன்டுள்ளனர். அப்போது விவசாயிகள் கனரக இயந்திரங்கள் மற்றும் அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து பேசிய அப்பகுதி விவசாயிகள்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு வந்து நோட்டீஸ் கொடுத்தனர். ஆனால் எதெற்காக வழங்கப்பட்டது என குறிப்பிடப்படவில்லை. அதில் தேதி மாற்று எந்தவிதமான சாட்சிகள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தரிசாக இருந்த இடத்தில் இது போன்ற பணிகள் நடத்தியிருந்தால் கூட நாங்கள் எதிர்ப்பு தெரிவித்திருக்க மாட்டோம் தற்போது விவசாய பணி நடைபெற்று வரும் இந்த சூழ்நிலையில் எங்களது விவசாயத்தை அளித்து பணிகளை மேற்கொள்கிறார்கள். அதிகாரிகளிடம் கேட்டால்; அதிகாரிகள் மிரட்டுவதாகவும், மத்திய அரசு மூலமாக உங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது மத்திய அரசின் திட்டம் இதை நீங்கள் தடுக்க கூடாது. காவல்துறையில் உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் மிரட்டுவதாகவும் விவசாயிகள் கூறியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

Related Stories:

>