×

மருத்துவ படிப்பு கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்: இதுவரை 39-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பம்

சென்னை: மருத்துவ படிப்பு கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க இன்றுடன் கால அவகாசம் நிறைவடைகிறது. கடந்த மாதத்தில் நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து கடந்த 3-ம் தேதி முதல் தமிழகத்தில் இருக்க கூடிய மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்ப பதிவானது நடைபெற்று வருகிறது. இன்று மாலை 5 மணியுடன் இந்த விண்ணப்ப பதிவு நிறைவடைய உள்ள நிலையில் இதுவரை 39,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவ கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் இருக்க கூடிய அரசு மருத்துவக்கல்லூரியில் உள்ள இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக்கல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வை மருத்துவ கல்வி இயக்குனரகம் நடத்துகிறது. இந்த கலந்தாய்வுக்கு விண்ணப்பித்துள்ளவர்களில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் தங்களுடைய விண்ணப்ப கட்டணங்களை செலுத்தியுள்ளனர். மேலும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் பூர்த்தி செய்யப்பட விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். விண்ணப்பித்துள்ள மாணவர்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ள தங்களது விண்ணப்பங்களை இன்று இரவு 11.59 மணிக்குள் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மருத்துவ கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.

இந்த விண்ணப்பங்களை சரிபார்த்த பின்பு வரும் 16-ம் தேதி இதற்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்ட ஓரிரு தினங்களில் மருத்துவ கலந்தாய்வு நடைபெறும். இன்று இறுதி நாள் என்பதால இன்று ஒரே நாளில் அதிகமானோர் மருத்துவ கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவ கல்வி இயக்குனராக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Tags : consultation , Today is the last day to apply for the medical course consultation: So far more than 39 students have applied
× RELATED வேதகிரீஸ்வரர் சித்திரை திருவிழா...