×

தமிழகத்தில் RSS யின் பிடியில் அதிமுக ஆட்சி என்பது நிரூபணம் : பாடத்திட்டத்தில் அருந்ததிராய் புத்தகம் நீக்கப்பட்டதற்கு தலைவர்கள் கண்டனம்!!

நெல்லை : நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் அருந்ததிராய் புத்தகம் நீக்கப்பட்டுள்ளது.எழுத்தாளரும் சமூக செயற்பாட்டாளருமான அருந்ததிராயின் Walking With The Comrades புத்தகம் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு சேர்க்கப்பட்டது. ஆனால் இதற்கு பாஜகவின் மாணவர் அமைப்பான ABVP எதிர்ப்பையடுத்து எம்.ஏ.ஆங்கில இலக்கிய பாடத்திட்டத்தில் புத்தகம் நீக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தில் அருந்ததிராய் மாவோயிஸ்ட், நக்சலைட்டுகளின் பகுதிகளுக்கு சென்ற அனுபவம் குறித்து எழுதியிருந்தார்.இந்நிலையில் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து பல்கலை. குழுவின் முடிவுப்படி அருந்ததிராயின் புத்தகம் நீக்கப்பட்டுள்ளதாக துணைவேந்தர் பிச்சுமணி தெரிவித்துள்ளார். 4 வருடமாக இருந்த பாடம் நான்கே நாட்களில் நீக்கம் செய்யப்பட்டுள்ளது. அருந்ததிராயின் புத்தகத்திற்கு பதிலாக எழுத்தாளர் கிருஷ்ணனின் My Native Land என்ற புத்தகம் சேர்க்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அருந்ததி ராய் எழுதிய புத்தகம் நீக்கத்திற்கு திமுக எம்.பி. கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ளார் ட்விட்டர் பதிவில், ஆட்சியதிகாரமும், அரசியலும் எது கலை, எது இலக்கியம் எதை மாணவர்கள் படிக்க வேண்டும் என்று முடிவு செய்வது ஒரு சமுதாயத்தின் பன்முகத்தன்மையை அழித்து விடும், எனத் தெரிவித்துள்ளார்.

அதே போல்,  காங்கிரஸ் கட்சியின் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,RSS பாடத்திட்டத்தில் என்ன இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது பாஐக ஆளும் மாநிலங்களில் நடக்கும் முதல் வேலை , தமிழகத்தில் RSS யின் பிடியில் அதிமுக ஆட்சி என்பது நிரூபணம் . கல்வியை மதவாதம் பிடிப்பதை காக்க வேண்டிய நேரம் ... 2021 யில் ... தமிழ் மண் முடிவு செய்யும, எனத் தெரிவித்துள்ளார்.


Tags : AIADMK ,Leaders ,removal ,Tamil Nadu ,RSS ,Arundhatirai , AIADMK rule, proof, curriculum, Arundhatirai, book, leaders, condemnation
× RELATED பாஜவால்தான் 30 எம்எல்ஏக்கள்...