×

தீபாவளி பண்டிகை கொண்டாடுவதற்காக எஸ்இடிசி பஸ்களில் 55 ஆயிரம் பேர் பயணம்: இன்றும், நாளையும் கூட்டம் அதிகரிக்க வாய்ப்பு

சென்னை: தீபாவளி பண்டியை கொண்டாடுவதற்காக நேற்று மாலை நிலவரப்படி எஸ்இடிசி பஸ்களில் 55 ஆயிரம் சொந்த ஊர்களுக்கு சென்றனர். இன்றும், நாளையும் இயக்கப்படும் சிறப்பு பஸ்களில் பயணிகள் கூட்டம் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.  நாளை மறுநாள் தீபாவளிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அரசு போக்குவரத்துக்கழகங்கள் சார்பில் நேற்று முதல் 13ம் தேதி வரையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. முன்பதிவு செய்தவர்கள் நேற்று முதல் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச்செல்ல துவங்கி விட்டனர். வழக்கமாக இயக்கப்படும் 2,000 பஸ்களில் 1,346 பஸ்கள் மட்டுமே நேற்று இயக்கப்பட்டது. சிறப்பு பஸ்களை பொறுத்தவரை 5 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டன. இதில், பல்வேறு ஊர்களுக்கு 54,040 பயணிகள் நேற்று மாலை 4 மணி நிலவரப்படி பயணித்துள்ளனர்.

இன்று 2,000 தினசரி பஸ்களும், சென்னையில் இருந்து 1,705 சிறப்பு பஸ்களும், மற்ற முக்கிய ஊர்களில் இருந்து 1,807 பஸ்களும் இயக்க திட்டமிடப்பட்டு இருக்கிறது. நாளை மறுநாள் 2,000 தினசரி பஸ்களும், சென்னையில் இருந்து 1,580 சிறப்பு பஸ்களும், பல்வேறு இடங்களில் இருந்து 2,540 பஸ்களும் இயக்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. கோயம்பேட்டிலிருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு  புறப்படும் பேருந்துகள் பூந்தமல்லி, நாசரத்பேட்டை, வெளிச் சுற்றுச்சாலை  வழியாக வண்டலூர் சென்றடைந்தது. அங்கிருந்து ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்து  நிறுத்தத்திற்கு சென்று தாம்பரம் மற்றும் பெருங்களத்தூரிலிருந்து பயணம்  மேற்கொள்ள முன்பதிவு செய்த பயணிகளை ஏற்றி சென்றது. இவ்வாறு பஸ்கள் சுற்றுச்சாலை வழியாக இயக்கப்பட்டதால் போக்குவரத்து நெரிசல் சற்று குறைவாக இருந்தது. இதேபோல் தனியார் ஆம்னி பஸ்களிலும் பயணிப்போரின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.


Tags : Deepavali ,Crowds ,SEDC , 55,000 people travel on SEDC buses to celebrate Deepavali: Crowds likely to increase today and tomorrow
× RELATED மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க...