×

வேலை வாங்கி தருவதாக 1.86 கோடி மோசடி வழக்கு எம்டிசி மேலாண் இயக்குநர் கணேசன் கைது: மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

சென்னை: மாநகர போக்குவரத்துக்கழகத்தில் வேலை வாங்கி தருவதாக 1.86 கோடி மோசடி செய்த வழக்கில் திடீர் திருப்பமாக தற்போது எம்டிசியில் மேலாண் இயக்குநராகவுள்ள கணேசனை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட போக்குவரத்து அதிகாரிகள் பலர் அடுத்து, அடுத்த கைது செய்யப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழக போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது அருள்மொழி என்பவர் புகார் அளித்தார். அந்த புகாரின்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் 1.86 கோடி மோசடி ெசய்ததாக தெரியவந்தது.

அதை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்னாள் அமைச்சர் ெசந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்தனர்.  மேலும், அவரை கைது ெசய்யவும் நடவடிக்கை எடுத்தனர். ஆனால் செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் முன் ஜாமின் பெற்றார். அதை தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் கரூர், சென்னை மந்தைவெளியில் உள்ள செந்தில் பாலாஜி வீடுகளில் அதிரடி சோதனை நடத்தினர். அந்த சோதனையில் மோசடிக்கான ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதேநேரம், இந்த வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் ெசந்தில் பாலாஜி தன்னை விடுவிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார்.

ஆனால் நீதிமன்றம் இந்த வழக்கில் இருந்து செந்தில் பாலாஜியை விடுவிக்க முடியாது என்று கூறியிருந்தது. இந்நிலையில் அடுத்த மாதம் இந்த வழக்கு மீண்டும் நீதிமன்றத்தில் வர உள்ளது. இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார் சென்னை ஜே.ஜே.நகரில் வசித்து வரும் மாநகர போக்குவரத்து ேமலாண் இயக்குநர் கணேசன் வீட்டில் கடந்த செப்டம்பர் 11ம் தேதி காலை 11 மணி முதல் விசாரணை நடத்தினர். 7 மணி நேரம் நடந்த இந்த விசாரணையில் மோசடி ெதாடர்பாக பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு மேலாண் இயக்குநர் கணேசன் அளித்த பதிலை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்தனர்.

அதேநேரம் கரூரில் உள்ள முன்னாள் அமைச்சர் ெசந்தில் பாலாஜி வீட்டிலும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். இதற்கிடையே மோசடி வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி நேரில் ஆஜராக வேண்டும் என்று மத்திய குற்றப்பிரிவு போலீசார் சமன் அனுப்பியிருந்தனர். அதன்படி கடந்த 9ம் தேதி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மத்திய குற்றப்பிரிவு போலீசார் முன்பு ஆஜராகி விளக்கம் அளித்தார். அதைத்தொடர்ந்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக தற்ேபாது மாநகர போக்குவரத்துக்கழகத்தில் மேலாண் இயக்குனராகவுள்ள கணேஷனை நேற்று அதிரடியாக கைது செய்தனர்.

அவரை போலீசார் தனியாக வைத்து மோசடி தொடர்பாகவும், மோசடிக்கு உடந்ைதயாக இருந்த அதிகாரிகள் யார், யார், பணி நியமனத்திற்காக வாங்கப்பட்ட பணம் யார், யாருக்கு வழக்கப்பட்டது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை மத்திய குற்றப்பிரிவு ேபாலீசார் கேட்டனர். அதற்கான பதிலையும் வாக்குமூலமாக பெற்று பதிவு செய்தனர்.  இந்த மோசடியில் தொடர்புடையதாக கூறப்படும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, மாநகர போக்குவரத்துக்கழக அதிகாரிகள் என அடுத்து, அடுத்து கைது செய்யப்படுவார்கள் என்றும் மத்திய குற்றப்பிரிவு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தற்போது எம்டிசி மேலாண் இயக்குநர் மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Ganesan ,MTC ,police action ,Central Crime Branch , MTC managing director Ganesan arrested in Rs 1.86 crore fraud case: Central Crime Branch police action
× RELATED தோல் புற்றுநோய் தடுப்பது எப்படி?