இலங்கையில் உள்ள மீனவர்களின் சேதமடைந்த படகுகள் ஏலம் மூலம் விற்பனை: மத்திய அரசுக்கு தமிழக அரசு வேண்டுகோள்

சென்னை: தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: 2018ம் ஆண்டு பல்வேறு நிகழ்வுகளில் இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 165 தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கை அரசால் விடுவிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து தமிழக அரசு மீன்வளத்துறை அலுவலர்கள், மீனவ பிரதிநிதிகள், மெக்கானிக்குகள் மற்றும் தச்சர்கள் கொண்ட குழுவினை இலங்கை–்கு அனுப்பி மீட்கும் நிலையில் உள்ள 36 விசைப்படகுகள் அரசு செலவில் 47.95 செலவில் சரி செய்யப்பட்டு தமிழகம் கொண்டு வரப்பட்டது. மோசமான வானிலை காரணமாக 4 படகுகளை தமிழகம் கொண்டு வர இயலவில்லை.

இலங்கையில் பல்வேறு துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள, மீதமுள்ள மீட்க இயலாத நிலையில் உள்ள 125 படகுகளை அதன் உரிமையாளர்கள் தங்கள் படகுகளை ஏலம், விற்பனை செய்து அந்த தொகையினை தங்களுக்கு வழங்கிட கேட்டுக்கொண்டனர். அதனடிப்படையில், இலங்கையில் உள்ள இந்திய தூதர பிரதிநிதிகள் முன்னிலையில் மீட்க இயலாத தமிழக படகுகளை ஏலம் மூலம் விற்பனை செய்து அந்த தொகையினை படகு உரிமையாளர்களிடம் வழங்கிட ஏதுவாக தமிழக அரசிற்கு அனுப்பி வைத்திட இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தினை தமிழக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>