காங்கிரஸ் கட்சி பொறியாளர் பிரிவு மாநில தலைவர் நியமனம்

சென்னை: காங்கிரஸ் கட்சியின் பொறியாளர் பிரிவு மாநில தலைவராக மனோஜ்குமாரை நியமனம் செய்து கேஎஸ்.அழகிரி உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கேஎஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடு காங்கிரஸ் பொறியாளர் பிரிவின் மாநில தலைவராக பொறியாளர் எஸ்.மனோஜ்குமார் நியமிக்கப்படுகிறார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். இவருடன் காங்கிரஸ் கட்சியினர் உறுதுணையாக நின்று பொறியியல் பட்டதாரிகள் மற்றும் அப்பணியில் உள்ளவர்களை ஒருங்கிணைக்கின்ற பணியை சிறப்பாக செய்யவேண்டும்.  புதிய பொறுப்பில் உத்வேகத்துடனும், கட்சி கட்டுப்பாடுடனும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்ற எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

Related Stories:

>