×

மொத்த பாதிப்பு 7.5 லட்சத்தை கடந்தது தமிழகத்தில் மேலும் 2,184 பேருக்கு கொரோனா: சுகாதார துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் புதிதாக 2,184 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 18,655 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 28 பேர் மரணம் அடைந்துள்ளனர். தமிழகத்தில் நேற்று 77,309 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 2,184 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையில் 571 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைச் சேர்த்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 50 ஆயிரத்து 409 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 2,210 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது வரை 7 லட்சத்து 20 ஆயிரத்து 339 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 18 ஆயிரத்து 665 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று மட்டும் 28 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் 13 பேர், அரசு மருத்துவமனையில் 15 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதைச் சேர்த்து மொத்த மரணங்களின் எண்ணிக்கை 11,415 ஆக உயர்ந்துள்ளது.

Tags : Corona ,Tamil Nadu: Health Department , Total damage exceeds 7.5 lakh Corona to 2,184 more in Tamil Nadu: Health Department
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...