மேல்மலையனூர் கோயில் ஊஞ்சல் உற்சவம் ரத்து

விழுப்புரம்: மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் வரும் 14ம் தேதி அமாவாசையன்று நடைபெறும் ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோய் பெருந்தொற்று காரணத்தினால் நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு வரும் 14ம்தேதி அமாவாசையன்று மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் ரத்து செய்யப்படுகிறது. மேலும், அன்றைய தினம் அங்களாம்மன் கோயிலில் அனைத்து வகையான தரிசனங்களும் தடை செய்யப்படுகிறது என இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

Related Stories:

>