2 வீடுகளை உடைத்து நகை, கொள்ளை

ஆவடி: ஆவடி, வசந்தம் நகர், கங்கை தெருவை சேர்ந்தவர் ஜோதிமுருகன் (53). மளிகைக்கடை நடத்தி வருகிறார். கடந்த 6ந்தேதி ஜோதிமுருகன் மகன் திருமணத்திற்காக சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக்குளம் சென்றார். பின்னர், அவர் அங்கிருந்து நேற்று மீண்டும் குடும்பத்துடன் வீடு திரும்பினார். அப்போது அவர் வீட்டின் முன்கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது, பீரோவில் வைத்திருந்த 5 பவுன் தங்க நகைகள், ரூ.50 ஆயிரம் பணம் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது.

மேலும், ஆவடியை அடுத்த பட்டாபிராம், பாரதியார் நகர், முல்லை தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் (36). மெக்கானிக். இவரது மனைவி சித்ரா இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. கடந்த 7ந்தேதி செல்வராஜ் குடும்பத்துடன் சொந்த ஊரான அரியலூருக்கு சென்றார். பின்னர், நேற்று காலை  குடும்பத்துடன் திரும்பினார். அப்போது அவரது வீடு உடைக்கப்பட்டு திறந்துகிடந்தது. மேலும், வீட்டு பீரோவில் இருந்த நகைகள், வெள்ளிப் பொருட்கள், ரூ.5 ஆயிரம் ரொக்கப்பணம் கொள்ளை போய் இருந்தது தெரியவந்தது. மேற்கண்ட இரண்டு கொள்ளைச் சம்பவங்கள் குறித்தும் புகாரின் அடிப்படையில் ஆவடி, பட்டாபிராம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories:

>