காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்தில் ஆர்ஓ வாட்டர், பள்ளி கட்டிடம்: திமுக எம்எல்ஏ திறந்து வைத்தார்

கூடுவாஞ்சேரி: கட்டாங்கொளத்தூர் ஒன்றியம் 3 ஊராட்சிகளில் தலா ரூ.8.75 லட்சம் மதிப்பில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் ரூ.20 லட்சம் மதிப்பில்  பள்ளி கட்டடிடத்தை திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் வரலட்சுமிமதுசூதனன் எம்எல்ஏ திறந்து வைத்தார். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், மண்ணிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட மண்ணிவாக்கம் கிராமம், வண்டலூர் ஊராட்சிக்கு உட்பட்ட ஓட்டேரி விரிவு பகுதி, ஊரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட ஊரப்பாக்கம் மேற்கு ஆகிய பகுதிகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பள்ளி கட்டிடம் அமைத்து தரக்கோரி திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் வரலட்சுமிமதுசூதனன் எம்எல்ஏவிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்து வலியுறுத்தினர்.

அதன்பேரில், செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ், மண்ணிவாக்கம், வண்டலூர், ஊராப்பாக்கம் ஆகிய ஊராட்சிகளில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் பள்ளி கட்டிடம் அமைக்கப்பட்டு அதன் திறப்பு  விழா நேற்று நடைபெற்றது. இதில், காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் வண்டலூர் எஸ்.ஆராமுதன் தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் எம்.கே.டி.கார்த்திக், மாவட்ட பிரதிநிதி எம்.டி.சண்முகம்,  ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் ஆப்பூர் சந்தானம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் ஜெ.ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினரும், செங்கல்பட்டு எம்எல்ஏவுமான வரலட்சுமிமதுசூதனன் கலந்துகொண்டு செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ் மண்ணிவாக்கம் மற்றும் ஊரப்பாக்கம்  ஆகிய ஊராட்சிகளில் தலா ரூ.8 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு நிலையமும், இதேபோல் ஓட்டேரி விரிவு பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பில் இரண்டு வகுப்பறைகள் கொண்ட கூடுதல் பள்ளி கட்டிடம்  ஆகியவற்றை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்.

Related Stories:

>