ஏழைகளின் இலவச மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்க மருத்துவமனைக்கு ரூ2.25 கோடி நன்கொடை: பிரசிடெண்ட் அபூபக்கர் குடும்பத்தினர் வழங்கினர்

சென்னை: அமெரிக்காவில் இந்திய ஹஜ் அசோஷியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கரின் குடும்பத்தினர் வாழ்ந்து வருகிறார்கள். சிகாகோவிலுள்ள ரஷ் மருத்துவமனையில் அபூபக்கரின் தாயார் மெகர் பூவா பலமாதங்களாக சிகிச்சை பெற்று அவ்வப்போது குணமடைந்து வந்தார். இதற்கு பிரதிபலனாக அவர்களது குடும்பத்தின் சார்பில் அமெரிக்காவிலுள்ள ஏழைகள், ரஷ் மருத்துவமனையில் இலவசமாக சிகிச்சை பெற ரூ.2 கோடியே 25 லட்சத்தை நன்கொடையாக மருத்துவமனையின் நிர்வாக இயக்குநரிடம், இந்திய ஹஜ் அசோஷியேசன் தலைவர் அபூபக்கர் குடும்பத்தின் கௌரவ தலைவரும், அபூபக்கரின் தந்தையாருமான ஜனாப்.ஆரிப் வழங்கினார்.

நிகழ்வில் அமெரிக்காவிலுள்ள அபூபக்கரின் மைத்துனர் ஹாஜி. டாக்டர் தாசுதீன், சகோதரி ஃபரிதா மற்றும் அபூபக்கரின் மனைவி ஹமீதா, மகன் அஜ்மல் முகம்மத், அமெரிக்காவிலுள்ள இந்திய தூதரக அதிகாரிகள், பிரமுகர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். காசோலையை பெற்ற ரஷ் மருத்துவமனையின் தலைவர் பேசுகையில், “மருத்துவமனையில் உள்ள ஒரு ஆடிட்டோரியத்திற்கு “மெகர் ஆடிட்டோரியம்” என்று பெயர் சூட்டப்படும்” என்றார்.    

Related Stories:

>