திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூ.1.67 கோடி உண்டியல் வருமானம்

திருச்செந்தூர்: அறுபடை வீடுகளில் 2வது படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கடந்த 7.7.20 தேதியிலிருந்து 10.11.20ம்தேதி வரை பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கைகள் நேற்று கோயில் இணை ஆணையர் (பொறு) கல்யாணி தலைமையில் திறந்து எண்ணப்பட்டன. உண்டியல் எண்ணும் பணியில்  உதவி ஆணையர்கள் தூத்துக்குடி ரோஜாலிசுமதா, திருச்செந்தூர் செல்வராஜ், ஆய்வர்கள் திருச்செந்தூர் முருகன், ஏரல் சிவலோகநாயகி, அலுவலக கண்காணிப்பாளர் சீதாலட்சுமி, பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், சுப்பிரமணியன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள், சிவகாசி பதினெண்சித்தர் பீடம் குருகுலம் வேதபாடசாலை உழவாரப்பணி குழுவினர்கள்  ஈடுபட்டனர்.

இதில் நிரந்தர உண்டியலில் ரூ.1 கோடியே 66 லட்சத்து 76 ஆயிரத்து 458ம், கோசாலை உண்டிய லில் ரூ.69 ஆயிரத்து 506ம், யானை பராமரிப்பு ரூ.16 ஆயிரத்து 594ம் என மொத்தம் ரூ.1 கோடியே 67 லட்சத்து 62 ஆயிரத்து 558 கிடைத்துள்ளது. மேலும் 1550 கிராம் தங்கம், 12 கிலோ 608 கிராம் வெள்ளி, 70 வெளிநாட்டு நோட்டுகளும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளனர். கடந்த செப்டம்பர் 1ம்தேதி முதல் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>