×

கட்டட வடிவமைப்பாளர் தற்கொலை தொடர்பான வழக்கு..!! அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமின்; உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு ! !

மும்பை: கட்டட வடிவமைப்பாளர் தற்கொலை தொடர்பான வழக்கில் ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமிக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்த நிலையில் உச்சநீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி தற்கொலைக்கு தூண்டியதாக எழுந்த புகாரின் பேரில் அவரை மும்பை காவல்துறை கைது செய்துள்ளது.

மும்பை உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியை, 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கவும் மும்பை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. இந்த நிலையில், மும்பை உச்ச நீதிமன்றத்தில் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் தலைமை செய்தி ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமியின் ஜாமீன் மனு நிராகரிகப்பட்ட நிலையில், அவர் உச்சநீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சந்திரசூட், இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய முன்பு அவசர வழக்காக இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், அர்னாப் கோஸ்வாமிக்கு இடைக்கால ஜாமின் வழங்கி உத்தரவிட்டனர். மேலும், இந்த வழக்கில் இன்னும் முழுமையாக முதல் தகவல் அறிக்கையே பதியப்படவில்லை. அதற்குள் ஏன் இந்த அவசரம் என காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளனர்.


Tags : Arnab Goswami ,Supreme Court , Architect suicide case .. !! Interim bail for Arnab Goswami; Supreme Court orders action!
× RELATED புதிய தலைமை செயலக கட்டிட வழக்கை அரசு...