×

எல்லையில் படைகளை விலக்கிக்கொள்ள இந்தியா - சீனா ஒப்புதல்!: தினமும் 30% படைகளை விலக்கிக்கொள்ள இருதரப்பும் நடவடிக்கை..!!

டெல்லி: மூன்று கட்டங்களாக படைகளை விலக்கிக்கொள்ள இந்தியா, சீன ராணுவம் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டுள்ளதை அடுத்து, எல்லையில் நிலவி வரும் பதற்றம் விரைவில் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எல்லையில் நிலவும் பதற்றத்திற்கு தீர்வு காண படைகளை விலங்கிக் கொள்வது தொடர்பாக ராணுவ உயர் அதிகாரிகள் மட்டத்திலான கலந்துரையாடல் கடந்த 6ம் தேதி நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் வெளியுறவு செய்தியாளர் நவீன் ஸ்ரீவத்சவா மற்றும் ராணுவ இயக்குனரக உயர் அதிகாரி காய்க் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர். தொடர்ந்து, பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதிலிருந்து பாங்காங் ஏரி பகுதியில் இருந்து படைகளை ஒரு வாரத்திற்குள் விலக்கிக்கொள்ள நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.

அதன்படி ஆயுதம் தாங்கிய வீரர்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனங்கள் ஒரேநாளில் வெளியேறியுள்ளன. இரண்டாம் கட்டமாக பாங்காங் ஏரியின் வடக்கு கரையில் இருந்து தினமும் 30 சதவீத படைகளை திரும்பப்பெற முடிவு செய்யப்பட்டு அதன்படி 3 நாட்களில் அங்கிருந்து படைகள் முழுவதுமாக வெளியேறவுள்ளன. தெற்கு பாங்காக் பகுதியில் சுசூல், ரிசாங் லா பகுதியில் இருந்து படைகளை விலக்கிக்கொள்ள இந்தியா -  சீனா இடையே ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது. படைகளை விலக்கிக்கொள்ளும் 3 கட்ட நடவடிக்கைகளை இருதரப்பும் இணைந்து ஆளில்லா வானூர்தி மூலம் கண்காணிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.


Tags : India ,withdrawal ,China ,border ,troops , Border, Force, India - China approval
× RELATED சொல்லிட்டாங்க…