×

பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிப்பாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கப்படும்; விருதுநகரில் முதல்வர் பழனிசாமி பேட்டி

விருதுநகர்: அரசின் பல்வேறு நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது என விருதுநகர் ஆய்வு கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியுள்ளார். கொரோனா பாதிப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று பிற்பகல் நடைபெற்றது. இதற்கு பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலை வகித்தார்.

விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்புப் பணிகள் குறித்தும் மற்றும் அரசு அறிவித்த பல்வேறு திட்டங்களின் செயல்பட்டுகள் குறித்தும் மாவட்ட உயர் அலுவலர்களுடன் தமிழக முதல்வர் பழனிசாமி ஆய்வுக் கூட்டம் நடத்தினார். முன்னதாக நிகழ்ச்சியில், 8,466 பயனாளிகளுக்கு ரூ.45.36 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார். இதனையடுத்து பேசிய முதல்வர் பழனிசாமி கூறியதாவது;

* அரசின் பல்வேறு நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது.

* தொழிற்சாலை நிறைந்த பகுதி எனினும் அரசு சிறப்பாக செயல்பட்டது.

* பட்டாசு தொழிலுக்காக அரசே வழக்கறிஞரை வைத்து வாதாடியது.

* தமிழகத்தில் புதிய கல்லூரிகள், மருத்துவமனைகள் வேகமாக உருவாக்கி வருகின்றன.

* ஆசியாவின் மிக பெரிய கால்நடை பூங்கா உருவாகி வருகிறது.

* நாட்டிலேயே கல்வித்துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளது.

* கொரோனா காலத்தில் வெளிமாநில தொழிலாளர்களுக்கும் தமிழக அரசு உதவி செய்கிறது.

* பட்டாசு மற்றும் தீப்பெட்டி தயாரிப்பாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்கப்படும். புதிதாக தொடங்கும் நல வாரியத்தால் 4 லட்சம் தொழிலாளர்கள் பயனடைவார்கள்.

* 7 பேர் விடுதலையில் ஆளுநர் தான் முடிவு எடுக்க வேண்டும்.

* அமைச்சர் துரைக்கண்ணு மரண அறிவிப்பில் மர்மம் எதுவும் இல்லை.

* விருதுநகரில் தினமும் 103 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன. விருதுநகரில் சுமார் 4 லட்சம் பேர் காய்ச்சல் முகாமில் பயன் அடைந்துள்ளனர்.

* நோய் பரவலை கட்டுப்படுத்த அரசு எடுத்த முயற்சி நல்ல பலனை அளித்துள்ளது.

* விருதுநகர் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

* விருதுநகர் அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.18 கோடி மதிப்பில் மகப்பேறு சிகிச்சைக்கு தனி கட்டடம் கட்டப்படும்.

* விருதுநகர் மாவட்டத்தில் பொதுமக்கள் அளித்த 4,131 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

Tags : welfare board ,Palanisamy ,match makers ,Virudhunagar , A separate welfare board will be set up for firecracker and match makers; Interview with Chief Minister Palanisamy in Virudhunagar
× RELATED மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால்...