×

தீபாவளி பரிசு வழங்குவது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் குற்றம்!: நீதிமன்ற பணியாளர்களுக்கு போலீசார் அன்பளிப்பாக பட்டாசு, இனிப்புகளை வழங்க வேண்டாம்..தூத்துக்குடி நீதிபதி

தூத்துக்குடி: தீபாவளியை முன்னிட்டு லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகளை மேற்கொண்டு வரும் நிலையில் தூத்துக்குடி நீதிபதி தற்போது காவல்துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நீதிமன்ற பணியாளர்களுக்கு போலீசார் அன்பளிப்பாக பட்டாசு, இனிப்பு போன்றவற்றினை வழங்க வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி லோகேஷ்வரன் எஸ்.பி. ஜெயகுமாருக்கு கடிதம் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகம் முழுவதும் லட்ச ஒழிப்புத்துறையினர் தீபாவளி பரிசுகள் வழங்குவதை தடுப்பதற்காகவும், லஞ்சத்தினை ஒழிப்பதற்காகவும் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறார்கள். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 30க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டிருக்கிறது. இதில் 6 அதிகாரிகள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்.

கிட்டத்தட்ட 5.5 கோடி மதிப்புள்ள லஞ்ச பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள். இந்நிலையில் தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி லோகேஷ்வரன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார். அக்கடிதத்தில் நீதிமன்ற பணியாளர்களுக்கு போலீசார் அன்பளிப்பாக பட்டாசு, இனிப்பு வகைகளை வழங்க வேண்டாம் அது லஞ்ச ஒழிப்பு சட்டத்தின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இதனை மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் தடுத்து நிறுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். தீபாவளி பரிசு வழங்குவது தற்போது வரை நடைமுறையில் உள்ளது என்றாலும் கூட அவை சட்டப்படி தவறு என்பதை உணர்ந்து நீதிமன்ற பணியாளர்களுக்கு போலீசார் பரிசுகள் வழங்குவதை கைவிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.


Tags : Deepavali ,crime , Deepavali gift, lakh elimination, court staff, police, firecrackers, sweets, Thoothukudi judge
× RELATED இணையவழிக் குற்றங்கள் அதிகம்...