×

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 10 முக்கிய உற்பத்தித் துறைகளுக்கு சலுகை அளிக்க முடிவு: நிர்மலா சீதாராமன் பேட்டி

டெல்லி: பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் 10 முக்கிய உற்பத்தித் துறைகளுக்கு சலுகை அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் இந்தியாவை உற்பத்தி கேந்திரமாக மாற்ற ஊக்கத்தொகை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 10 முக்கிய உற்பத்தித் துறைகளுக்கு சலுகை அளிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்; சுயசார்பு இந்தியாவை உறுதிப்படுத்தும் நோக்கில் பல்வேறு முதலீட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலீடுகளை அதிகரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. சமூக கட்டமைப்பு திட்டங்களில் பொருளாதார ஊக்கத்தை மேம்படுத்த திட்டம்; உற்பத்தியை அடிப்படையாக கொண்டு ஊக்கத் தொகை அளிக்கும் திட்டம் நல்ல பலன் தரும். உற்பத்தி துறைக்கு ரூ.2 லட்சம் கோடி சலுகைகள் அளிக்கப்பட்டுள்ளன; முதலீடுகளை அதிகரிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.

ஏசி, எல்.இ.டி. பல்ப், ஸ்டீல் ஆகியவற்றின் உற்பத்திக்கு ஊக்கம் வழங்கப்படுகிறது. மருத்துவம், மின்னணு உள்ளிட்ட துறைகளில் உற்பத்தியை அதிகரிக்க ஊக்கத்தொகை தர முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத் தொகையாக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி செலவிடப்படும். ஜவுளி, உணவுப் பொருட்கள் தயாரிப்பு, பதப்படுத்தல் ஆகிய துறைகளும் இந்த ஊக்கத் திட்டத்தின் கீழ் வருகின்றன. வாகன தயாரிப்பு, ஜவுளி உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு சலுகைகள் கிடைக்கும். ஜவுளித்துறைக்கு ரூ.10,863 கோடி, உணவுப் பொருட்கள் துறைக்கு ரூ.10,900 கோடி வழங்கப்படும்.

தொழிற்சாலைகளின் உற்பத்திக்கு ஏற்ப சலுகைகள் அளிக்கப்படும். சோலார் மின் உற்பத்தி துறைக்கு ரூ.4500 கோடி, இரும்பு உற்பத்தித் துறைக்கு ரூ.6322 கோடி, ஆட்டோமொபைல் துறைக்கு ரூ.57042 கோடி ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார்.



Tags : Modi ,Cabinet meeting ,Nirmala Sitharaman , Cabinet meeting chaired by PM Modi decides to offer concessions to 10 key manufacturing sectors: Nirmala Sitharaman Interview
× RELATED பெண்களை முன்னிறுத்தி பல திட்டங்களை...