வாகனங்கள், ஜவுளி நிறுவனங்கள் உள்ளிட்ட 10 முக்கிய உற்பத்தி நிறுவனங்களுக்கு சலுகைகள் அளிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

டெல்லி: 10 முக்கிய உற்பத்தி துறைகளுக்கு சலுகைகள் அளிக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகள் எவ்வளவு உற்பத்தி செய்கின்றனவோ அதனடிப்படையில் சலுகை வழங்கப்படும் என்று அமைச்சர் ஜவடேகர் தெரிவித்துள்ளார். வாகனங்கள், ஜவுளி நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய உற்பத்தி நிறுவனங்களுக்கு சலுகைகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஏசி, எல்இடி பல்ப் உள்ளிட்ட பொருட்கள், ஸ்டீல் ஆகியவற்றின் உற்பத்திக்கு ஊக்கம் வழங்கப்படுகிறது என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். சுயசார்பு இந்தியாவை உறுதிப்படுத்தும் நோக்கில் பல்வேறு முதலீட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மருத்துவம், மின்னணு உள்ளிட்ட துறைகளில் உற்பத்தியை அதிகரிக்க ஊக்கத்தொகை தர முடிவு செய்யப்பட்டுள்ளது. உற்பத்தி துறைக்கு ரூ.2 லட்சம் கோடியில் ஊக்கத்தொகை அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகையாக அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி செலவிடப்படும்.

Related Stories:

>