×

குற்ற செயல்களில் ஈடுபடுவோர் வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை பயன்படுத்துவதால் ஏன்? ஒட்டுமொத்தமாக தடை செய்யக்கூடாது: ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: குற்ற செயல்களில் ஈடுபடுவோர் வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை பயன்படுத்துவதால், வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை ஏன்? ஒட்டுமொத்தமாக தடை விதிக்கக்கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியிருக்கிறது. சட்டக்கல்லூரி மாணவர்கள்  வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை பயன்படுத்துவதை தடுக்ககோரிய வழக்கில் இத்தகைய கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மதுரையை சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், மதுரையில் 50 சதவீத வாகனங்களில் வழக்கறிஞர் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஒட்டி சட்டவிரோத செயல்களில் ஈடுபடும் கஞ்சா விற்பனையாளர்கள், ரவுடிகள் ஆகியோர் காவல்துறையிடம் இருந்து தப்பி செல்ல வாய்ப்பாக அமைகிறது. இத்தகைய வழக்கறிஞர் ஸ்டிக்கர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு பாதுகாப்பு அரணாக செயல்படுகிறது. இருசக்கர வாகனங்களில் வழக்கறிஞர் ஸ்டிக்கர் குறித்து பார்கவுன்சில் உறுப்பினர், மூத்த வழக்கறிஞர்கள் வாகனங்களை நிறுத்தி சோதனையிடும் போது, தாங்கள் சட்டக்கல்லூரி மாணவர்கள் என பதிலளிக்கின்றனர். மேலும் மற்ற மாநிலங்களில் அதிகளவிலான சட்டக்கல்லூரிகள் உருவாக தொடங்கிவிட்டன.

இதன் காரணமாக ரவுடிகள் பலர் மற்ற மாநிலங்களில் உள்ள சட்ட கல்லூரியில் இருந்து பணம் கொடுத்து பட்டங்களை பெற்று வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை வாகனங்களில் பயன்படுத்தி காவல்துறையிடம் இருந்து எளிதில் தப்பிக்கின்றனர். எனவே 2019 விதிகளின்படி, பார் கவுன்சில் அனுமதி வழங்கிய ஸ்டிக்கர்களை வழக்கறிஞர்கள் வழங்க வேண்டும். தொடர்ந்து அனுமதியின்றி சட்டக்கல்லூரி மாணவர்கள் வாகனங்களில் வழக்கறிஞர் ஸ்டிக்கர்கள் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவானது நீதிபதி கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அச்சமயம் வழக்கை விசாரித்த நீதிபதிகள், குற்ற செயல்களில் ஈடுபடுவோர் வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை பயன்படுத்துவதால் ஏன் ஒட்டுமொத்தமாக வழக்கறிஞர் ஸ்டிக்கர்களை வாகனங்களில் ஓட்டுவதை தடை செய்ய கூடாது என கேள்வி எழுப்பினர். மேலும் உள்துறை செயலாளர், தமிழக காவல்துறை தலைவரை எதிர்மனுதாரராக சேர்த்து பதில்மனு தாக்கல் செய்ய ஆணை பிறப்பித்து வழக்கை நவம்பர் 23ம் தேதிக்கு ஒத்துவைத்துள்ளனர்.


Tags : Crime, Attorney Sticker, Icord Branch
× RELATED உதகை அருகே உள்ள சின்கோனா கிராம...