×

நாகர்கோவில் பாலியல் மோசடி வழக்கில் திருப்பம்: காதல் மோசடி மன்னன் காசி அழித்த 1,000 வீடியோக்களை மீட்டது சி.பி.சி.ஐ.டி. போலீஸ்..!!

குமரி: காதல் வலையில் விழ வைத்து பல பெண்களை ஏமாற்றிய மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட காசியிடம் இருந்து மீட்கப்பட்ட லேப்டாப்பில் ஏராளமான வீடியோக்களை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். சுமார் 1000க்கும் மேற்பட்ட வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும், சி.பி.சி.ஐ.டி. தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. பல பெண்களை இணையத்தின் வாயிலாக ஏமாற்றிய வழக்கில் கைது செய்யப்பட்ட காசியிடமிருந்து லேப்டாப் பை கைப்பற்றப்பட்ட நிலையில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் கணேசபுரத்தை சேர்ந்தவர் காசி. சமூக வலைத்தளத்தில் பல பெண்களை காதலிப்பது போன்று நடித்து ஆபாச படங்களை எடுத்து மிரட்டியதாக இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவர் நாகர்கோவில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தொடர்ந்து, 5 பெண்கள் காசி மீது புகாரளித்தனர்.

வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தியதில் அவரது நண்பர் ஜினோ என்பவரும் உறுதுணையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு அவரும் கைது செய்யப்பட்டார். இதையடுத்து இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. காசியிடம் விசாரணை மேற்கொண்டதில் அவரது மற்றொரு நண்பர் தினேஷ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். காசியின் வீட்டில் சோதனை செய்ததில் பல தடையங்கள் அழிக்கப்பட்டிருந்தது. அது தொடர்பாக காசியின் தந்தை கைது செய்யப்பட்டார். இந்நிலையில் சென்னையை சேர்ந்த ஒரு பெண் காசி மீது புதிய புகாரினை அளித்தார். அதன் அடிப்படையில் போலீஸ் காவலில் எடுக்கப்பட்டு காசியிடம் நடத்திய விசாரணையில் பல தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காதல் மோசடி மன்னன் காசி அழித்த 1,000 வீடியோக்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீட்டுள்ளனர். மேலும் காசி மூலம் ஆபாச வீடியோக்களை பெற்ற கூட்டாளிகளையும் சி.பி.சி.ஐ.டி.போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Tags : Nagercoil ,CBCID ,love scam king ,Kasi Police , Nagercoil, Sexual Fraud, Ka, Video, CBCID
× RELATED நாகர்கோவிலில் சுற்றி திரிந்த 13 நாய்களுக்கு கருத்தடை