×

பிரத்யேக செயலியை உருவாக்கி, ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட வடமாநில இளைஞர்கள் 4 பேர் கைது: யானைக்கவுனி போலீசார் நடவடிக்கை..!!

சென்னை: ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து சென்னையை சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 வடமாநில இளைஞர்களை யானைக்கவுனி போலீசார் கைது செய்தனர். இந்தியாவில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து, ஐபிஎல் சூதாட்டமும் முக்கிய நகரங்களில் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. சென்னையிலும் சமீபத்தில் ஐ.பி.எல். சூதாட்டத்தில் ஈடுபட்ட தந்தை-மகன் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், பிரத்யேக செயலியை உருவாக்கி, ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை சவுகார்பேட்டை பகுதியில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து ஆன்லைன் சூதாட்டம் நடைபெறுவதாக, போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் அங்கு அதிரடியாக சோதனை மேற்கொண்ட போலீசார், சூளையை சேர்ந்த மையூர், ஏழுகிணறு சேர்ந்த  பங்கஜ், பொண்டித்தோப்பு பகுதியை சேர்ந்த சந்தீப் குமார், தீரஜ் ஆகிய 4 பேரை கைது செய்தனர். அவர்கள் மீது சட்டவிரோதமாக தடுத்தல், ஆபாசமாக பேசுதல், மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பிரத்யேகமாக செயலி ஒன்றினை வடிவமைத்து இவர்கள் சூதாட்டத்தில் ஈடுபட்டது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களிடம் இருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட  செல்போன்கள், மடிக்கணினிகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.


Tags : youths ,police action ,North Indian ,Yanaikkavuni , Dedicated processor, IPL. Gambling, arrest
× RELATED குமாரபாளையம் அருகே கோர விபத்து பனை...