தமிழகம் முழுவதும் 31 மாவட்ட வருவாய் அலுவலர்கள் டிரான்ஸ்பர்: அரசு உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் பணியாற்றி வரும் 22  மாவட்ட வருவாய் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்தும், 9 துணை கலெக்டர்கள் மாவட்ட வருவாய் அலுவலர்களாக பதவி உயர்வு வழங்கி பணியிட மாற்றம் செய்து தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார். தமிழக அரசு தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவு விவரம்: சென்னை தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன மாவட்ட வருவாய் அலுவலர் பத்மாவதி, திருச்சி ஒழுங்கு நடவடிக்கை கமிஷனர். திருச்சி ஒழுங்கு நடவடிக்கை கமிஷனர் பழனியம்மாள், சென்னை தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு நிறுவன மாவட்ட வருவாய் அலுவலர். தஞ்சாவூர் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல், சென்னை நெடுஞ்சாலை முதன்மை இயக்குனர் அலுவலக மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு), சென்னை தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு, மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் ஸ்ரீபெரும்புதூர் சென்னை விமான நிலையில் விரிவாக்க திட்டத்தின் மாவட்ட வருவாய் அலுவலர் (நிலஎடுப்பு) பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மாற்றுத்திறனாளிகள் ஆணையர் அலுவலக இணை இயக்குனர் முருகேசன் ஈரோடு பவானிசாகர் சிவில் சர்வீஸ் பயிற்சி நிறுவன மாவட்ட வருவாய் அலுவலர், ஈரோடு பவானி சாகர் சிவில் சர்வீஸ் பயிற்சி நிறுவன மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மாவட்ட வருவாய் அலுவலர், சென்னை தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழக மேலாளர் விமலா மதுரை தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாளர், தர்மபுரி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாளர் அஜய் சீனிவாசன் தமிழ்நாடு சுகாதார மேம்பாட்டு திட்ட மாவட்ட வருவாய் அலுவலர், விடுப்பில் இருந்த மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்ஸ் சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மாவட்ட வருவாய் அலுவலர், சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் காளிதாஸ் சென்னை கலால் வரி இணை ஆணையர், சென்னை தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு ஆணைய பொது மேலாளர் சந்தோஷினிசந்திரா சென்னை சுற்றுவட்ட சாலை மாவட்ட வருவாய் அலுவலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மாவட்ட வருவாய் அலுவலர் தர்பாகராஜ் அரசு விருந்தினர் மாளிகை மாவட்ட வருவாய் அலுவலர், கிருஷ்ணகிரி சிப்காட் சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி சென்னை மாவட்ட வருவாய் அலுவலர் என மொத்தம் 22 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதே நேரத்தில், துணை கலெக்டர்கள் 9 பேருக்கு மாவட்ட வருவாய் அலுவலராக பதவி உயர்வு வழங்கியும், பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி காஞ்சிபுரம் கலெக்டர் உதவியாளர் நாராயணன் காஞ்சிரம் மற்றும் திருவள்ளூர் தேசிய நெடுஞ்சாலை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர், சென்னை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவன துணை கலெக்டர் கீதா சென்னை அண்ணா மேலாண்மை நிறுவன மாவட்ட வருவாய் அலுவலர், அரியலூர் கோட்ட வருவாய் அலுவலர் ஜோதி சென்னை-திருத்தணி-ரேணிகுண்டா சாலை சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலர்,

திருச்சி வருவாய் நீதிமன்ற துணை கலெக்டர் ரவிச்சந்திரன் ஜெயலலிதா இயல் இசை பல்கலை பதிவாளர், செங்கல்பட்டு உதவி ஆணையர் (கலால்) ராஜ்குமார் தர்மபுரி சிப்காட் மாவட்ட வருவாய் அலுவலர், காஞ்சிபுரம் துணை கலெக்டர் ஜீவா (நில எடுப்பு) சென்னை தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டு கழக மேலாண்மை இயக்குனர், கரூர் ஆதிதிராவிட நல அலுவலர் லீலாவதி சென்னை தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழக வருவாய் அலுவலர், நெல்லிக்குப்பம் இஐடி பாரி இந்தியா நிறுவன டிஸ்டிலரி அலுவலர் முருகன் சென்னை மாற்றுத்திறனாளிகள் நல இணை இயக்குனர், தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய துணை கலெக்டர் பவாநிதி கிருஷ்ணகரி சிப்காட் மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) என மொத்தம் 9 பேருக்கு பதவி உயர்வு வழங்கி பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories:

>