அதிகாரிகள் குளறுபடியால் முதல்வர் எடப்பாடி சென்ற விமானம் தாமதம்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம், 17 நிமிடங்கள் தாமதமாக சென்னையிலிருந்து தூத்துக்குடி புறப்பட்டுச் சென்றது. சென்னையில் இருந்து தூத்துக்குடி செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் வழக்கமாக நடைமேடை 55 அல்லது 57லிருந்து காலை 8.35 மணிக்கு புறப்பட்டு செல்லும். ஆனால், நேற்று பழைய விமான நிலையம் பகுதியில் உள்ள நடைமேடை 2லிருந்து புறப்பட்டது. எனவே அந்த விமானத்தில் ஏற்றப்பட வேண்டிய பயணிகளின் லக்கேஜ்கள், உள்நாட்டு முனையத்திலிருந்து பழைய விமான நிலைய பகுதிக்கு கொண்டு சென்று ஏற்றுவதில் காலதாமதம் ஏற்பட்டது. எனவே, விமானம் புறப்படுவதில் 17 நிமிடங்கள் தாமதம் ஏற்பட்டு, காலை 8.52 மணிக்கு புறப்பட்டுச் சென்றது.  

இதேபோல், திடீரென நடைமேடை மாற்றத்திற்கு என்ன காரணம் என்று அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்த விமானம் இரவில் வந்த விமானம். பழைய விமான நிலையத்தில், நடைமேடை 2ல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. காலையில் அந்த விமானம் வழக்கமாக புறப்பட வேண்டிய நடைமேடை 55 அல்லது 57க்கு எடுத்துச் சென்று நிறுத்தப்படும். ஆனால் நேற்றுமுன்தினம் சில நிர்வாக காரணங்களால் அதேபோல் செய்ய முடியவில்லை. எனவே, அந்த விமானம் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்தே புறப்பட்டு சென்றதால், சற்றுதாமதமாக புறப்பட்டது என்றனர்.

Related Stories:

>