×

மாற்றுத் திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகள் காத்திருப்பு போராட்டம் நடத்தினர். உத்திரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் மாற்றுத் திறனாளிகள் சார்பில் காத்திருப்பு போராட்டம் நேற்று நடந்தது. வட்டத் தலைவர் ஏழுமலை தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் பாரதிஅண்ணா, மாவட்டச் செயலாளர் அரிகிருஷ்ணன், மாவட்டத் தலைவர் முனுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், 100 நாள் வேலை திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு தனி அடையாள அட்டை வழங்க வேண்டும். 100 நாள் வேலையில் சம்பள பாக்கியில்லாமல் முழு ஊதியம் வழங்க வேண்டும்.

வீடு இல்லாத மாற்றுத் திறனாளிகளுக்கு பசுமை வீடு வழங்கி, குடியிருப்பு திட்டத்தில் முன்னுரிமை அளிக்க வேண்டும். கால்நடை பராமரிப்பு திட்டத்தின் கீழ் இலவச ஆடு, மாடுகள் வழங்கப்படுவதில் மாற்றுத் திறனாளி பெண்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும், பேரிடர் காலகட்டத்தில் 5000 ஆக உதவித் தொகையை உயத்தி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதையடுத்து அவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர். மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததன் பேரில் அவர்கள் கலைந்து சென்றனர்.

Tags : Alternative Talents Waiting Struggle , Alternative Talents Waiting Struggle
× RELATED மாற்றுத் திறனாளிகள் காத்திருப்பு போராட்டம்