×

வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்து பழங்குடியின மக்கள் உள்ளிருப்பு போராட்டம்: மதுராந்தகத்தில் பரபரப்பு

மதுராந்தகம்: தமிழ்நாடு பழங்குடி மக்கள் சங்கம் மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் இணைந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுராந்தகம் பஸ் நிலையம் அருகே நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெருமன்ற மாவட்ட தலைவர் சேகுவேரா தாஸ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக சிபிஐ தேசிய நிர்வாக குழு உறுப்பினர் மகேந்திரன், நிர்வாகிகள் பி.எஸ்.எல்லப்பன், பார்த்திபன், முனுசாமி, வெங்கடேசன், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது, அவர்கள் விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை திரும்பப் பெற வேண்டும். மதுராந்தகம் பகுதி பழங்குடியினருக்கு பட்டாவுடன் கூடிய வீட்டுமனைகள் வழங்க வேண்டும்.

தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும். மின்சார வசதி அனைவருக்கும் ஏற்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர், வட்டாட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் மனு அளிக்க, பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக சென்றனர். வட்டாட்சியர் அலுவலகம் சென்ற அவர்கள், திடீரென உள்ளே அமர்ந்து, தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து, மதுராந்தகம் போலீசார் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று, உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக உறுதியளித்தனர். அதன்பேரில், அனைரும் கலைந்து சென்றனர்.



Tags : governor ,office , Indigenous people come to the governor's office to file a petition
× RELATED கூச் பெஹர் பகுதியில் ஆளுநர் ஆனந்தபோஸ்...