×

வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியாது: தேர்தல் ஆணையம் மீண்டும் உறுதி

பீகார் தேர்தல் முடிவுகளில் பாஜ கூட்டணி முன்னணி வகித்து வந்த நிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (இவிஎம்) நம்பகத்தன்மை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் உதித் ராஜ் கேள்வி எழுப்பினார். ‘சந்திரனிலும் செவ்வாயிலும் உள்ள செயற்கைக்கோள்களை பூமியில் இருந்தபடி இயக்க முடியும் என்றால், வாக்குப்பதிவு இயந்திரங்களை ஏன் ஹேக் செய்ய முடியாது?,’ என அவர் கூறினார். இதற்கு, வாக்குப்பதிவு இயந்திரத்துக்கான பொறுப்பு வகிக்கும் தலைமை தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர் சுதிப் ஜெயின் அளித்த விளக்கத்தில், இது குறித்து பலமுறை விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இவிஎம்.கள் முற்றிலும் பாதுக்காப்பானவை, முறைகேடு செய்ய முடியாதவை.

உச்ச நீதிமன்றமும் கூட இதனை உறுதிப்படுத்தி உள்ளது. இவிஎம்.களில் முறைகேடு செய்ய முடியும் என்பதை அரசியல் கட்சிகள் நிருபிக்க முடியுமா? என தேர்தல் ஆணையம் கடந்த 2017ல் சவால் விட்டது. இவிஎம்.கள் சந்தேகத்துக்கு இடமின்றி முற்றிலும் பாதுகாப்பானவை, தரமானவை. இதை விட வேறு சிறப்பான விளக்கம் எதுவும் தேவையில்லை,’ என்றார்.

ஆமோங்கோ... சூப்பர்தானுங்கோ...
காங்கிரஸ் எம்பி.யான கார்த்தி சிதம்பரம் நேற்று வெளியிட்ட  டிவிட்டர் பதிவில், `தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக வராதபோது அரசியல் கட்சிகள் இவிஎம். பற்றிய சந்தேகத்தை கிளப்புகின்றன. அதே நேரம் இவிஎம். தவறானது என்று இதுவரை எந்தவொரு அரசியல் கட்சியும் அறிவியல் ரீதியாக நிருபிக்கவில்லை. எனவே, இவிஎம். மீது பழி சுமத்துவதை நிறுத்த வேண்டும். இவிஎம் வலிமையானது, துல்லியமானது, நம்பத்தகுந்தது. என்னுடைய நிலைப்பாடு இதுவே,’ என கூறியுள்ளார்.

* பீகாரில் மொத்தமுள்ள 243 சட்டப்பேரவை தொகுதிகளில் 3,733 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் பெண் வேட்பாளர்கள் 371 பேர். ஒருவர் மூன்றாம் பாலினத்தை சேர்ந்தவர்.
* 38 மாவட்டங்களில் 55 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டன.
* காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
* மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 7.30 கோடி. இதில் 4.16 கோடி வாக்காளர்கள் வாக்களித்தனர். வாக்கு விகிதம் 57 சதவீதம்.
* கடந்த 2015ல் மாநிலம் முழுவதும் 65,000 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இம்முறை கொரோனா பாதிப்பால் சமூக இடைவெளியை கடைபிடிக்க மாநிலம் முழுவதும் 1 லட்சத்து 6,515  வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.

கலக்கிய கம்யூனிஸ்ட் கட்சிகள்
மகாபந்தன் கூட்டணியில் 3 கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கும் மொத்தமாக 29 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இதில்,  இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்) 19, இந்திய கம்யூனிஸ்ட் 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 4 தொகுதிகளில் ேபாட்டியிட்டன. இதே கூட்டணியில் 2015 தேர்தலில், இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்) 3 இடங்களில் மட்டுமே வென்றது. இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு இடத்தை கூட பிடிக்கவில்லை.
இந்நிலையில், இந்த தேர்தலில் இந்த மூன்று கட்சிகளும் குறிப்பிடத்தக்க வெற்றியை நோக்கி நகர்ந்து வருகின்றன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா மூன்றிலும், இந்திய கம்யூனிஸ்ட் (எம்எல்) 12 தொகுதிகளிலும் முன்னணி பெற்றுள்ளன.

Tags : Election Commission , Voting machine cannot be tampered with: Election Commission reaffirms
× RELATED வாக்குச்சாவடி மையத்தின் அருகில்...